பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடைகலமும் படைவலமும் - る。 என்று சொல்லியருளினர். பிறரிடமிருந்து பொருளேப் பெறுதல் பேரறம் ஆகும் என்று சிலர் சொல்லினும் கொள்ளுதல் தீதே, கொடுப்பதுதான் நன்று என்ருர் பிறர்க்குக் கொடை வழங்குவதால் பேரின்ப உலகம் சாருதல் சாலாது என்னினும் ஈதலே நல்லது என்பது அப்புலவரது உறுதியான கருத்து. மாவலி மன்னன் மாயவகிைய வாமனனுக்கு மூன் றடி மண் வழங்குதற்கு முற்பட்டபோழ்து, வெள்ளி விரைந்து வந்து தடுத்தான். கொடுப்பதைத் தடுப்பது கண்ட மாவலி மன்னன், குருவின்மேல் கொடுஞ் சினம் கொண்டான். அவ் வெள்ளியை அறிவிலி யென இகழ்ந்து பேசினன். கொடுப்பதைத் தடுக் கும் கொடியவனே உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி உலேவாய்!” என்று சபித்தான். ' வெள்ளியை யாதல் விளம்பினே மேலோர் வள்ளிய ராக வழங்குவ தல்லால் எள்ளுவ என்.சில இன்னுயி ரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது தன்ருல்' என்று மாவலியின் வாயிலாகக் கம்பர், இக்கருத்தை நன்கு வலியுறுத்தினர். சிறந்த குடியில் பிறந்த வள்ளல்களின் நல்லியல்பு களே எல்லாம் வள்ளுவர் ஒரே குறட்பாவில் திறம்பட நயம்பெறத் தெளிவுறுத்துகின்ருர். * .

  • இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள' - என்பது வள்ளுவரின் தெள்ளமுத வாக்கு இப் பாட லில் நம் தெய்வப்புலவர், பழந்தமிழ் நாட்டில் திகழ்ந்த பல்வேறு திறமுடைய வள்ளல்களையும் படம் பிடித்துக்