பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窓6 வள்ளுவர் சொல்லமுதம் காட்டுகிருர். இந்த உண்மையை உயர்ந்த உரையா யாசிரியராகிய பரிமேலழகர் வாயிலாகத் தெரிந்து மகிழலாம். தமிழர், இல்லை, என்ற சொல்லேயே இழிந்த சொல்லாகக் கருதினர். இல்லாதவன் என்னும் சொல், இரப்பான் கூறும் இழிசொல்லாகும். அவ் இழி சொல்லை, கல்லகுடிப் பிறந்தார் நல்கூர்ந்தாராணுலும் சொல்லுதற்கு மனம் கொள்ளமாட்டார்கள். அதனைத் தம்பால் சொன்னவர்க்கு அன்பால் ஈவர். இங்ங்ணம் அன்றி, இலன், என்ற இழிசொல்லைப் பிறன், தம் பால் சொல்வதற்குமுன், அவன் அகக் குறிப்பை முகக் குறிப்பால் அறிந்து கொடுக்கும் சிறப்புடைய ராயும் கொடையாளர் பண்டு விளங்கினர். மேலும் அவ் இழிசொல்லப் பிறன் ஒருவன்பால் சென்று, அவன் உரையாத வகையில் பெருங்கொடை வழங் கினர் சிலர். யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் என்று வஞ்சநெஞ்சமுடையார் வழங்கும் இழிமொழியைச் சொல்லாது நல்ல உள்ளத்துடன் இரங்தார்க்கு நல்கினர். இங்ங்ணம் பல்வேறு திறத் தினராகிய வள்ளல்களின் உயர்பண்பை எல்லாம், வள்ளுவர் சிறிய குறட்பாவில் செறித்துக் காட்டினர். கொடையில் சிறந்தவன் கன்னன் என்று கொண்டாடுவர் பண்டை அறிஞர். பாரதப் போரில் கன்னன் படைக்கலம் தாங்கி, வில்லின் வல்ல விசய னுடன் கடும்போர் புரிந்தான். கன்னன் உடம்பு முழு தும் விசயனது கடுங்கணேகள் தைத்து முள்ளம்பன்றி யைப்போல் காட்சி அளித்தான்; அம்பு தைத்த இட மெல்லாம் குருதிவெள்ளம் சொரிய, மெய் தளர்ந்து