பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடைகலமும் படைவலமும் š了 தேரின் மேல் சாய்ந்தான் ; ஆயினும் அவ ன து உடம்பைவிட்டு உயிர் அகலவில்லை. அக் கன்னன் பண்ணிய எண்ணரிய புண்ணியங்கள், அவனது உயிரை அகலவொட்டாது காத்து நின்றன. இந்த உண்மையைக் கண்ணன் கண்டான். விசயனத் தேர் மிசை நிறுத்தித் தவவேதியன் வடிவு தாங்கிக் கன்னனே நண்ணினன். கன்னனே அடைந்த கண்ணன், இமயத்தில் தவம் இயற்றிய ஏழையேன், கின் கொடைத்திறம் அறிந்து இங்கு வந்தடைந்தேன் இயைந்ததொரு பொருளே இக்கணத்தே ஈவாய்,” என்று வேண்டி நின்ருன். தவவேதியன் கூறிய மொழிகள், கன்னன் இருசெவிக்கு அமுதென இனித்தன. கன்றென. நகைத்தான் நல்லருள் வள்ளலாகிய கன்னன். நான் தரத்தக்க பொருளே நவில்க !' என்று இயம்பின்ை. மாயவன் ஆகிய மாதவன், “நீ இதுகாறும் பண்ணிய புண்ணியம் அனைத்தும் தருக,' என்று கூறினன். அதுகேட்ட கன்னன் களிகூர்ந்து, ஆவியோ நிலையில் கலங்கிய தியாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன் பாவியேன் வேண்டும் பொருளெலாம் தயக்கும் பக்குவம் தன்னில்வந் திலேயால் ஒவிலா தியான்செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்கநீ உனக்குப் பூவில்வாழ் அயனும் நிகரலன் என்ருல் புண்ணியம் இதனினும் பெரிதோ!' என்று கூறித் தான்செய்த புண்ணியம் அனைத்தையும். தவவேதியனுக்குத் தந்தான்.