பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:58 வள்ளுவர் சொல்லமுதம் கன்னனது புண்ணியத்தை அவன்பால் இரந்து பெற்ற கண்ணன், அதனைத் தாரை வார்த்துத் தருக" என்று வேண்டினன். போர்க்களத்தில் ஆரு யிர் ஊசலாடும் வேளையில் தாரை வார்க்க நீருக்கு என்ன செய்வான் கன்னன்? தனது மார்பில் தைத்த் பகழியொன்றை விரைந்து பறித்தான். அப் புண்ணி விருந்து இரத்தமாகிய செக்ர்ே பெருகி வழிந்தது. அதனைத் தன் அங்கையால் ஏந்தி, முனிவனது அங் கையில் பெய்து மகிழ்ந்தான். இவ்விடத்தே வில்லி புத்துாரார் கன்னனது கொடைவீரத்துடன் அவனது படைவீரத்தையும் குறிப்பாகப் போற்றுகிருர்,

  • கைவேல் களிற்ருெடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும் ” என்ற தமிழ் மறவனது வீரத்தைக் கன்னன் பால் கண்டு களிக்கச் செய்கிரு.ர். உயிரைக் காத்துகின்ற புண்ணியத்தையும் உவப் புடன் வழங்கிய வள்ளலாகிய கன்னனது பன்னரிய கொடைத்திறத்தைக் கண்ணன் கண்டு கழிபேருவகை கொண்டான். நீ விரும்பிய வரங்களே விளம்புக; உனக்குத் தருவோம்’ என்று உரைத்தருளினன். ' அல்லல்வெவ் வினையால் இன்னம்.உற் பவமுண் டாயினும் ஏழெழு பிறப்பும் இல்லையென்(று) இரப்போர்க்(கு) இல்லையென் அரையா இதயம்நீ அளித்தருள் என்முன்’ 'வினைப்பயன் காரணமாக, மீண்டும் யான் உலகில் தோன்றினால், இல்லை என்று சொல்லி இரப்போர்க்கு, யானும் இல்லே என்று சொல்லாத நல்ல உள்ளத்தை நல்கியருள்வாய், என்று கண்ணன்பால் கன்னன்