பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடைகலமும் படைவலமும் 59 வரம் வேண்டினன். இங்ஙனமாயின் கன்னனது இன் னருட் கொடைத்திறத்தை என்னென்று இயம்புவது! தமிழகத்தே வாழ்ந்த கடை எழு வள்ளல்கள் கொடையில் சிறந்து விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் நன்கு பறை சாற்றும். குறுகில மன் னர்களாய் வாழ்ந்த அப்பெரு வள்ளல்களின் கொடை நலத்தை நடைபயின்ற குற்றமிழ்ப் பாக்களால் பழங் தமிழ்ப் புலவர்கள் பாராட்டினர். பாரியும் பேகனும் பகுத்தறிவற்ற சிற்றுயிர்க்கும் பரிந்தருள் புரிந்தனர். முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும், எல்லே நீர் ஞாலத்து இசைவிளங்க அம் மன்னர்கள் வழங்கி மகிழ்ந்தனர். பாரிவள்ளல் தனது பேரருள் கொடைத்திறத் தால் பார்முழுதும் போற்றும் பரந்த புகழை அடைக் தான். குறுநில மன்னன் ஒருவன் பெரும்புகழ் கொண்டு விளங்குவதைக் கண்ட தண்டமிழ் நாட்டு முடிமன்னர் மூவரும் பொருமை கொண்டனர். அவ னது பறம்பு மலேயை மூவரும் படையொடு சூழ்ந்து முற்றுகை இட்டனர். பாரியின் ஆருயிர் நண்பராகிய கபிலர் என்னும் கவிஞர் பெருமான், பறம்பினை முற்றிய மூவேந்தர்க்கும் பாரியின் சீரிய வண்மையை யும் வன்மையையும் கூறத்தொடங்கினர்: 'நீங்கள் மூவிரும் நீள்படை குழப் பன்னெடு நாட்கள் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டா லும் பாரியை வெற்றி கொள்வதோ, பறம்பினைப்பற்று வதோ நுங்களால் ஆகாது. இத் தண்பறம்பு கன்னடு முந்நூறு ஊர்களே உடையது. அனைத்தையும் பாரி யைப் பாடி வந்த பரிசிலர் பெற்றுக்கொண்டனர்.