பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வள்ளுவர் சொல்லமுதம் இனி, அவனும் யாமுமே இருக்கின்ருேம். விேரும் அப்பரிசிலர் போலப் பாடியாடி வருவீராயின் எம்மை யும் எஞ்சி நிற்கும் பறம்பு மலேயையும் பெற்று மகிழ லாம்,' என்று கபிலர் முடிமன்னர் மூவர்க்கும் மொழிக் தருளினர். கவிஞர் கூறிய இம்மொழிகளில் பாரியின் கொடைகலமும் படைவலமும் ஒருங்கு விளங்கக் காணலாம்.

  • : என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்

சென்று பொருள்கொடுப்பர் தீதற்ருேர்’ - என்பர் சிவப்பிரகாசர். ஒப்புரவு செய்யும் உயர்ந்த உள்ளமுடையார் பிறர்க்கு உதவுவதைத் தமது கடப் பாடு என்று கருதினர். அவர்கள் கைம்மாறு கருதிப் பிறர்க்கு உதவுபவர் அல்லர். மாநிலத்து உயிர்கட்கு மழைவளம் சுரக்கும் மேகம் அவ்வுயிர்கள்பால் எந்தப். பயனையும் எதிர்நோக்குவது இல்லே. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு) என்னுற்றும் கொல்லோ உலகு" என்பது வள்ளுவர் தெள்ளமுத வாக்கு. பாரியின் கொடைநலத்தைப் பாராட்டிய பாவலர் கபிலர் பெரு மானும், அப் பாரியை மாரிக்கு ஒப்பிட்டு உரைப்பார் " நாட்டில் உள்ள புலவர் பலரும், பாரி, பாரி' என்று அவன் ஒருவனேயே பாராட்டுகின்றனர். இவ்வுலகத்து உயிர்களைப் புரத்தற்குப் பாரி ஒருவனே அன்றி மாரி யும் உண்டே' என்று வஞ்சப் புகழ்ச்சியாகப் பழிப் பதுபோலப் பாராட்டினர். செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்பு பலவே, என்பர் சங்கச் சான்ருேர், பாடுபட்டுத் தேடிய பணத்தைத் தாமும் துய்க்காது மற் றவர்க்கும்