பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடைகலமும் படைவலமும் 6i வழங்காது மண்ணுள் புதைத்துவைக்கும் மாந்தரைக் கேடுகேட்ட மானிடரே !' என்று பழித்துரைப்பார் ஒளவையார். 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு, என்று வள்ளுவர் வலியுறுத்துவார். முன்னே கல்வினையால் பொன்னும் மணியும் பொருளும் மருவிய பெருஞ் செல்வர்கள், ஊருணியன்ன உலகவாம் பேரறிவாள ராக ஒளிர வேண்டும். உள்ளுர்ப் பழுத்த பயன்மரம் போல நயனுடையாளராகத் திகழவேண்டும். மருந் தாகித் தப்பாத மரம்போலப் பெருந்தகையாளராக விளங்க வேண்டும். ஊருணியும், பயன்மரமும், மருந்து மரமும் உயர்ந்த உள்ளம் படைத்த செல்வர்க்கு உவமைகளாக வள்ளுவரால் ஒதப்படுகின்றன. ஊருணி நீர், ஊரிலுள்ள மக்களுக்கெல்லாம் பயன்படும். புல் பூண்டு முதலாய ஓரறிவுயிருக்கும் அந்நீர் உதவுவதாகும். ஆயினும் அங்ர்ே, ஊருணியி னின்று மக்களாலோ மற்ற உயிர்களாலோ எடுத்துப் பயன்படுத்தப் பெருதொழிந்தால் ஊருணி அழிந்து போகும். அதுபோலவே ஊருணியன்ன செல்வர்கள், தம் செல்வத்தை மற்றவர்க்கு வழங்குவது தம் செல் வம் பெருகவேண்டும் என்று எண்ணும் தன்னல உணர்ச்சியாலேயே ஆகும். நடுவூர்ப் பழுத்த கன்மரம், தன் கனிகளை உதிர்த்தேயாகவேண்டும். பாழாய்ப்போவது பசு வயிற்றிலே போனல் கலந்தானே வீணே கிலத்தில் விழ்ந்த கனிகள், உண்பவர் கையில் தடையின்றிக் கிடைத்தால் உவப்புடன் உண்ணத்தானே செய்வர். இங்கனம் பிறர்க்குப் பயன்தரும் குறுங்கனி விளக்கும். வ. சொ.-5