பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வள்ளுவர் சொல்லமுதம் கன்மரம் போன்ற செல்வர்கள், தமது வளர்ச்சி கரு தித் தம் செல்வத்தை மற்றவர்க்கு வழங்குவர். அங் வனம் வழங்குங்கால் தம்மால் மற்றவர் பெறும் நலம் தமது புகழ் வளம்பெறுதற்குக் காரணம் என்பதை எண்ணி வழங்குகின்றனர். ஆதலின் இவர்பால் தன்னலத்துடன் பிறர் நலமும் பின்னி நிற்கிறது. மருந்து மரம், தனது வேரிலிருந்து உச்சி வரையி லுள்ள எல்லா உறுப்புக்களானும் மற்றவர்க்கு மருந்தாக உதவுகிறது. இலையும் பூவும் காயும் கனியு மாகிய எல்லாம் நல்ல மருந்துகளாகப் பயன்படும் மரங்கள் சில உள. எடுத்துக்காட்டாக வேம்பினைக் குறிக்கலாம். அது வீசும் காற்றும் மாசற்ற மருந்து என்பர் மருத்துவர். அம் மருந்து மரம், தனக்குரிய அனைத்தையும் மற்றவர்க்கு மருந்தாக வழங்கித் தன்னையே மாய்த்துக்கொள்கிறது. ஐயோ! ஒன் ருென்ருக கம்பால் உள்ள அனைத்தையும் மக்கள் கவர்ந்து செல்கின்றனரே " என்று கவன்று, தனது பொருளே மற்றவர் கொள்ள மறுப்பதில்லை. தன்னை அடியோடு வெட்டி வீழ்த்திலுைம், தான் தரையில் விழும் வரையில் வெட்டுவானுக்கும் வெப்பு அக ற்றும் தட்பமான நிழலேத் தந்துதவும் மாண்புடையதன்ருே ! ' குறைக்கும் தனயும் குளிர்நிழல்த் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம் ’ என்பது தமிழ்மூதாட்டியாரின் அமுதமொழி. இத்தகைய மருந்துமரம் போன்ற பெருந்தகை யாளர்கள் பிறருக்கு உதவுவதே தமது கடமையெனப் பேணி வாழ்வர். " அன்புடையார் பிறர்க்கு என்பும் உரியர் என்ற வள்ளுவர் வாய்மொழிக்குத் தக்க