பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடைகலமும் படைவலமும் 63 சான்ருகத் திகழ்வர். தன்னலம் என்பது அவர்கள் உள்ளத்தே எள்ளளவும் இருத்தற்கு இடனில்லே பிறர் நலமே அவர்தம் வாழ்வின் பெருநோக்கமாக விளங்கும். இவர்களே தமக்கென வாழாது பிறர்க் கென வாழும் பெருந்தகையாளர்கள். உண்டால் அம்ம இவ்வுலகம்......-- தமக்கென முயலா நோன்ருள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே' என்று இளம்பெரு வழுதி, அவர்தம் பெருமையை விளக்கினர். பிறர்க்கென முயன்றுவாழும் பெருக் தகை மக்களாலேயே இந்தப் பேருலகம் அழியாது நிலவுகிறது என்பது அவ்வழுதியின் கருத்து. இதனே, பண்புடையார்ப் பட்டுண்டு) உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்ற வள்ளுவர் தெள்ளமுத வாக்கும் நன்கு வலி யுறுத்தும். இங்ஙனம் மற்றவர்க்கு உதவி மகிழ்வதைன்ே வாழ்வின் உயர்ந்த நோக்கமாகக் கொண்டு விளங்கிய தண்டமிழ் காட்டினர், படைவலியிலும் தலைக் கொண்டு போற்றும் ஆற்றல் பெற்று விளங்கினர். 'கூற்றுவனே கொதித்து எழுந்து வந்தாலும் அஞ் சாது கூடி எதிர்க்கும் நெஞ்சுரன் உடையதே படை ” என்று படைக்கு இலக்கணம் பகர்வார் வள்ளுவர். பகைவரை வெகுண்டு நோக்கிய கண்கள், பாய்ந்து வரும் வேலேக் கண்டு இமைத்து விடுமாயின் அதுவே தோல்வி என்று கருதும் தோள்வலம் படைத்த வாள் வீரர் வாழ்ந்த நாடு நம் தமிழகம், கையில் தாங்கிய வேலை, எதிர்த்துவந்த களிற்றின்மீது எறிந்து கொன்ற