பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁座 வள்ளுவர் சொல்லமுதம் வீரன், தன்னைநோக்கிப் பிளிறிவரும் மற்ருெரு பெருங் களிற்றைத் தாக்குதற்கு வேல் காடின்ை. தனது மார்பகத்திலேயே பகைவர் எறிந்த வேல் பதிந்திருப் பது கண்டு, அதனைப் பறித்தெடுத்துச் சிரித்து மகிழ்ந் தான். முகத்திலும் மார்பிலும் பகைவருடைய படை கள் தாக்குண்டு, விழுப்புண் படாத காளே வீணுளாக எண்ணி வெறுக்கும் வீரர்கள் இங்கு வாழ்ந்தனர். இவ்வாறு தமிழர் படைவீரத்தைப்பற்றி, வள்ளுவர் நம் உள்ளம் துள்ளி எழுமாறு சொல்லுவார். . பகைவர் காட்டின்மீது படையெடுத்த கொடை யாளகிைய சோழன் கலங்கிள்ளி வஞ்சினம் ஒன்று கூறினன்: . ' மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி ஈயென இரக்குவ ராயின், சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்; இன்னுயி ராயினும் கொடுக்குவென்; இந்நிலத்து ஆற்ற அடையோர் ஆற்றல்போற்ரு (து)என் உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே ? என்று வீரமொழி கூறுகின்ருன். பகைவர் எனது அடிபணிந்து 'ஈ' என்று இரப்பாராயின் எனக்குரிய பேரரசைக் கொடுப்பது பெரிதன்று. எனது இன் னுயிரை வேண்டினும் ஈவேன். ஆல்ை, எனது ஆற். ற்லேயும் உள்ளத் துணிவையும் எள்ளி கையாடும் இழிஞன், தாங்கும் புலியைக் காலால் இடறிய குருடன் போலப் பிழைத்துபோதல் அரிது. இங்ங்னம் பேசிய கலங்கிள்ளியின் வஞ்சினத்தில் அவனது கொடைநல. மும் படைநலமும் ஒருங்கு விளங்குதலைக் காணலாம்,