பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ அறிவும் ஒமுக்கமும் கற்றும் கேட்டும் தெளிந்தும் பழகியும் பெற்ற அறிவே நிறைந்த அறிவாகும். கல்வியின் பயன் அறிவு” என்று கற்றறிந்தோர் கூறுவர். தெய்வப் புலவராய திருவள்ளுவர் அறிவின் இலக்கணத்தைத் திறம்பட இயம்பியுள்ளார். கல்வி கேள்விகளின் கிறைவே அறிவு பெறுதற்கு உறுதுணை என்பதை அறிவுறுத்தக் கல்வி கேள்விப் பகுதிகளே அடுத்து அறிவுடைமை என்னும் அதிகாரத்தை அமைத் துள்ளார். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தலே அறிவாகும் என்று இலக் கண உரையாசிரியர்கள் விளக்குவர். இதனையே நம் தெய்வப்புலவர், சென்ற இடத்தால் செலவிடா திதொரீஇ - நன்றின்பால் உய்ப்பது அறிவு” என்று கூறியருளினர். குதிரையை நிலம் அறிந்து செலுத்தும் வாதுவன் போல வேருக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்று பரிமேலழகர் உரைவிளக்கம் தந்தார். எந்தப் பொருளை எவர், எவர் இயம்பக் கேட்பினும் அப்பொருளின் மெய்யான பயனைக் காணவல்லதே அறிவாகும் என்று மேலும் குறிப்பர். உலகத்தோடு பொருந்த ஒழுகுவதே அறி வாகும். அவ்வாறு ஒழுக அறியாதவர் பல கற்ரு ராயினும் கல்லாத புல்லரே என்று சொல்லுவார் வள்ளுவர். உலகத்தை ஒருவனுக்கு நட்பாக்குவதும் அங் நட்பின்கண் முன்மலர்தலும் பின்கூம்புதலும்