பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெள்ளமுதம் திருவள்ளுவருக்குப் பாமாலை குட்டிய பாவாண ருள் ஒருவராய ஆலங்குடி வங்களுர் என்னும் அருங் தமிழ்ப்புலவர் திருக்குறள் தெ ன் ள மு தி ன் தீஞ் சுவையை வியந்து போற்றுகிரு.ர். வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும் தெள்ள முதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம் உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால் வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து. இப்பாட்டில் ஆலங்குடி வங்கர்ை, வள்ளுவர் வழங்கி அருளிய திருக்குறள் என்னும் தெள்ளமுதின் தீஞ் சுவைக்கு வானவர் உண்ட அமிழ்தின் அருஞ்சுவை யும் ஒவ்வாது என்று உவந்து புகழ்ந்தார். வானமுதம் உண்டவர் அழியாத பெருவாழ்வு அடைதல்போலத் திருக்குறள் தெள்ளமுதம் உண்டவர் உலகில் கல் வாழ்வுபெற்று உய்வர். ஆயிரத்து முந்நூற்று முப் பது அருந்துளிகளே கொண்ட அமுதப் பொற்கிண் ண்ம் நமது அருமைத் திருக்குறள். அத்தெள்ளமுதத் தீந்துளிகளே உளமாரப் பருகினேர் தமிழ் வளமார்ந்த பெரும்புலவராய்த் திகழ்வர். மன்னு தமிழ்ப் புலவராய் மாநிலத்தில் வீற்றிருக்கலாம் என்பர் நத்தத்தனர் என்னும் கற்றமிழ்ப் புலவர். திருக்குறள் தெள்ளமுதம் சிந்தைக்கு இனியது . செவிக்கு இனியது வாய்க்கு இனியது வந்த இரு வினேக்கும் மாமருந்தாய் இலகுவது என்று கவுணியர்ை கட்டுரைப்பர். பிழை மிகுந்த பாக்களை நோக்கி நோக்கித் தலைக்குத்துநோயால் அகலப்புண்ட தமிழ்ப் புலவராய சீத்தலேச்சாத்தர்ைக்குத் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் தெள்ளமுதமே நோய் நீக்கும்