பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வள்ளுவர் சொல்லமுதம் இன்றி ஒருகிலேயனுமாறு செய்வதும் அறிவே இத்தகைய அறிவு, தன்னே உடையவர்க்கு இறுதி வாராமல் காக்கும் கருவியாகும். பகைவர்க்கும் அழிக்கலாகாத உட்கோட்டையாகும். தெளிந்த அறிவினை உடையவர்கள் தாம் சொல் லும் பொருள்கள் அரியனவாயினும் கேட்பார்க்கு எளியனவாய் மனங்கொள்ளுமாறு சொல்லுவர். பிறர்பால் தாம் கேட்பன அறிதற்கரிய நுண்ணிய வாயினும் அவற்றைக் கூர்ந்து நோக்கித் தெள்ளிதின் அறிவர். அவர் பின்னே வரக்கடவதனே முன்னே அறியவல்லராயிருப்பர். அஞ்சத்தக்கவற்றிற்கு அஞ்சி ஒழுகுவர். இத்தகையார் கடுங்குமாறு வருந்துன்பம் ஒன்றும் இல்லை என்பர். இவர்கள் அவ் அறிவை அன்றிப் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் பெற். றவர் ஆவர். அறிவிலார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாத வறியராவர் என்பார் வள்ளுவர். அறிவை உலகறிவு என்றும் மெய்யறிவு என் றும் இருகூறு படுத்துவர் சான்ருேர். உலக வாழ்வை நலம்பெற கடத்துவதற்குப் பெருந்துணே புரிவதே உலகறிவாகும். உயிர், வீடுபேருகிய உயர்நலம் பெறு தற்கு உறுதுணைபுரியும் அறிவே மெய்யறிவு என லாகும். இதனைத் திருவள்ளுவர் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தால் விளக்குவார். எப்பொருள் எத் தன்மைத்தாகத் தோன்றிலுைம் அத் தோன்றிய இயல்பைமட்டும் கண்டொழியாது அப்பொருளின் கண் கின்று மெய்யான பொருளேக் காண்பதே மெய்யறி வாகும் என்பர். மேலும் பிறப்பிற்கு முதற்காரண மாகிய அறியாமை அகல, அரிய வீடுபேற்றிற்குக்