பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவும் ஒழுக்கமும் 67 காரணமாகிய செவ்விய பொருளைக் காண்பதே மெய் யுணாவாகும் எனபா. மெய்யறிவுடைய மேலோர் மீண்டும் உலகில் பிறத்தல் இலர். அவர்கட்கு விட்டின்பம் விளைவது உறுதியாகும். அவர்கள் எய்திகின்ற நிலவுலகத் தினும் எய்தக் கடவதாய வீட்டுலகம் அவர்கட்குமிகவும் கணித்தாகும். அத்தகைய மெய்யுணர்வை உபதேச வாயிலாகவே ஒருவன் பெறமுடியும். அனுபவமுடைய ஞானதேசிகளைப் பணிந்தே அவன்பால் கேட்டுணர வேண்டும். அங்ங்னம் கேட்ட உபதேச மொழிப் பொருளை அளவைகளாலும் பொருந்தும் ஆற்ருலும் தெளிய ஆராய்தல் வேண்டும். அதன்ை முதற் பொருளை உள்ளவாறு உணர்தல் வேண்டும். அங்ங் னம் உணர்ந்தாற்குப் பிறப்பு உளதாகாது என்பர். எல்லாப் பொருட்கும் சார்பாய் உள்ள செம்பொருள் தன்மையை உணர்ந்து இருவகைப் பற்றும் அற் ருெழிய ஒழுக வல்லயிைன் அவனைச் சாரநின்ற துன் பங்கள் சேராது அகலும். மெய்ஞ்ஞான முதிர்ச்சி உடையார்க்குக் காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அறவே அற்ருெழிதலால் அவற்றின் காரியமாகிய வினைப்பயன்கள் விலகுவனவாகும். இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றென மதிக் கும் உணர்வுடையாரே மெய்யுணர்வுடையார். அன்ன வரே மெய்ப்பொருளேக் காணும் மேலவர் என்பர் ஆன்ருேர், - வைததனே இன் சொல்லாக் கொள்வானும் தெய்பெய்த - சோறென்று கூழை மதிப்பானும்-ஊறிய கைப்பதனக் கட்டியென்று உண்பானும் இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ்வார்’ - -