பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

教器 வள்ளுவர் சொல்லமுதம் என்பது திரிகடுகம். பழித்துப் பேசும் இழிமொழிகள்ே இனிய வாழ்த்தென எண்ணுவார், பாழும் கூழைப் பககெய் கலந்த சோறென எண்ணி உண்ணுவார், மிகவும் கசப்பான பொருளே இனிப்பான கருப்பங்கட்டி என்று விருப்புடன் உண்ணுவார் ஆகிய இன்னவ. ரெல்லாம் மெய்ப்பொருள் காணும் மெய்யுணர்வுடை யார் என்று கல்லாதனர் சொல்லுவார். அறிவின் பயனே ஒழுக்கமென ஆன்ருேர் உரைப்பர். ஒழுக்கம் என்னும் சொல், தான் ஒழுகு த லும் பிறரை ஒழுகுமாறு செய்தலும் என்ற இரு கருத்தையும் உணர்த்துவதாகும். ஒருவன் தனது அறிவின் முதிர்ச்சியால் ஒழுகலாற்றைப் பிறர்க்கு மட்டும் அறிவுறுத்தலால் பயன் இல்லை. தானும் அவ் வொழுக்க நெறியில்கின்று மற்றவர்க்கு எடுத்துக்காட் டாய் இலங்குதல் வேண்டும். ஒதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை என்பது முதுமொழிக்காஞ்சி. " இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்' என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஒழுக்கம் உடைய வர் வாய்ச்சொற்களே வாழ்வில் ஊன்றுகோல்போல உதவுவதாகும். அறிவுடையார் வாய்ச்சொல் என்று வள்ளுவர் குறிக்காததன் கருத்துக் கூர்ந்து நோக்கத் தக்கது. ஒழுக்கம் உடையவர்கள் மறந்தும் தீய சொற் களே உரையார், ஒழுக்கம் இல்லாதவன் அறிவு, உல கிற்குப் பயன்தராது என்பது நம் புலவரின் உறுதி யான கருத்து. ஆதலின், பல்வேறு ஒழுக்கங்களையும் தனித்தனியே வகுத்துப் பேசும் வள்ளுவர், ஒழுக்க முடைமை என்றே ஓர் அதிகாரம் வகுத்தருளிர்ை.