பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவும் ஒழுக்கமும் 69 ஒழுக்கமே ஒருவற்குப் பெருமையும் சிறுமையும் தருவதாகும். ஒழுக்கம் இல்லாதவன் உயர்குடிப் பிறப்பினயிைனும் அச் சிறப்பினை இழப்பான். இழுக் கம் இழிந்த பிறப்பாய்விடும் என்றே குறிப்பார். வேதியன் கற்ற வேதத்தை மறந்தாலும் பின்னும் ஓதி அவ்வறிவைப் பெற்றுக்கொள்ளலாம். அவன் குலவொழுக்கம் குன்றுவானுயின் எல்லா நலங்களும் இழக்தொழிவான். ஆதலின், ஒழுக்கம் உடைமையே உயர்குடிப் பிறப்பாகும். அதுவே எல்லார்க்கும் சிறப் பினத் தருவது. உயிரினும் மேலாக ஒம்பத்தக்கது என்பர். அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து தெளிக் தாலும் இருமைக்கும் துணையாவது இவ் ஒழுக்கமே. இவ் உண்மைகளை அறிந்த சான்ருேர் என்றும் ஒழுக் கத்தில் தவறமாட்டார்கள். தவறுவராயின் அடையத் தகாத பெரும்பழி வந்து சாரப் பெறுவர். அன்னர் மறந்தும் தீய சொற்களே வாயால் கூருர், இங்ங்ணம் ஒழுக்கத்தைப் பொதுவாகப் பேசிய பெருநாவலர், இன்றியமையாது அமையவேண்டிய சில சிறப்பான ஒழுக்கங்களைக் குறிப்பிடுகிருர் இல் வாழ்க்கை முதலாகப் புகழ் இறுதியாக உள்ள இருபது அதிகாரங்களால் இல்லறத்தார்க்குரிய நல்லொழுக்கங் களே எல்லாம் தெளிவுறப் பேசும் திருவள்ளுவர் ஒழுக்கத்தை நடுநாயகமாக வைத்துப் பின்னும் முன்னுமாக அறவொழுக்கங்களை வலியுறுத்துகிரு.ர். ஆதலின் அன்புடைமை முதலாகப் புகழ் இறுதியாகக் கூறும் எல்லா இயல்புகளும் ஒழுக்கத்தின் பாற் பட் டனவே. - - அன்பென்னும் அடிப்படையின்மேல் தான் ஒழுக்கமென்னும் உயர்மாடத்தை அமைக்கமுடியும்