பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வள்ளுவர் சொல்லமுதம் அன்பு முதிர்ந்துழித் தொடர்பற்ற பிறரையும் விரும் பும் பேரார்வம் பிறக்கும். அவ் ஆர்வமிகுதியால் எத் தகையாரும் இனிய நட்பினர் ஆவர். எவரையும் விருந்தினராக ஏற்றுப் போற்றும் பெருந்தகைமை உளதாகும். எல்லோரிடத்தும் இன்சொல் பேசும் இயல்பு தானே அமையும். பணிந்து நடக்கும் பண்பு பெருகும். செய்ங்கன்றி மறவாத சீரிய திறம் வாய்க்கும். வள்ளுவர் செய்ங்கன்றி அறியும் ஒழுக்கினைப் பெரிதும் வற்புறுத்துகிருர், தனக்கு முன் ஒர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவி யின் சிறப்பு அளப்பரியது. அதற்குக் கைம்மாருக மண்ணுலகும் விண்ணுலகும் சேர்த்து வழங்கிலுைம் ஒப்பாகாது. ஒருவனுக்கு உயிர்ங்ேகும் எல்லேக்கண் செய்த உதவி, அவனது தகுதியை நோக்கச் சிறியீ தாயினும் அக்காலத்தை நோக்க ஞாலத்தின் மாணப் பெரிதாகும். பயனை எதிர்நோக்காது செய்த உதவி யின் உயர்வு கடலினும் பெரிதாகும். இங்கனம் உதவியின் மாண்பினைத் தெளிவுற விளக்கினர். 'உப்பிட்டவரை உள்ளளவும் கினே' என்பது தெள் ளிய பழமொழி. துன்பக்காலத்துப் பற்றுக்கோடாய் நின்று அதனே அகற்றினரது கட்டை மறத்தலும் துறத்தலும் பொருத்தமற்ற செயலாம். தினத்துணை நன்றி செய்தாலும் பனைத்துணையாக மதித்தவுே அறிஞர் கடனுகும். கல்லோர் தமது அல்லல் அகற் றியார் நட்பை, எழுபிறப்பும் எண்ணிப் போற்றுவர் ஆதலின், கன்றிமறப்பது கன்றன்று என்று கூறுவர் செய்ங்கன்றி மறத்தல் உய்தியில்லாத பெரும்பாவம் பெரிய அறங்களை அழித்தவர்க்கும் கழுவாய் உள