பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவும் ஒழுக்கமும் 7豫 தாகும். நன்றி கொன்ற மகனுக்குக் கழுவாயே இல்லை. அத்துணைப் பெரிய கொடிய பாவம் நன்றி மறத்தல் என்று வள்ளுவர் வன்மையாகக் கூறுவார் 'எந்நன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லே செய் ந்தன்றி கொன்ற மகற்கு" என்பது அவர்தம் மறைமொழி. ஒருவன் செய்த கன்றி ஒன்றனே கினைந்தபோது, அவன் கொன்ருலன்ன இன்னலைப் பின்னெருகால் கொடுப்பினும் அது மறந்துபோம். அந் நன்றி உணர்ச்சி; நடுவுநிலைமையினின்று பிறழுமாறு செய் தலும் உண்டு. அவ்வாறு பிறழுதல் கூடாது என்பதை வலிவுறுத்தவே செய்க்கன்றியறிதலை அடுத்து கடுவு நிலைமையை நவில்கின்ருர் வள்ளுவர். பகைவர், அய லார், நண்பர் என்னும் முத்திறத்தவரிடத்தும் ஒப்ப நடக்கும் இயல்பே நடுவுநிலைமை எனலாகும். 'சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கேர்டாமை சான்ருேர்க் கணி. என்பது வள்ளுவர் சொல்லமுதம். முன்னே சமனாக கின்று பின் தன் கண் வைத்த பாரத்தை வரையறுக் கும் இயல்புடையது துலாக்கோல். அதனைப்போன்று காய்தல் உவத்தல் அகற்றி ஒன்றனே ஆய்தலே அறிவுடையார் செயலாகும். அத்தகைய நடுவுநிலைமை சான்ருேர்க்கு அணியெனப் போற்றும் ஆற்றல் சான்றது. - சொல்லின் கண் கோடுதல் இல்லாத நல்லியல்பே நடுவுநிலைமையாகும். அவ் வியல்பு, உட்கோட்டம் இன்மையை உறுதியாகப் பெறுவதால் அமைவதாகும் என்பர் திருவள்ளுவர். வாணிகம் செய்வார் எளிதில்