பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் சொல்லமுதம் கடுவுகின்லமையினின்று கழுவுத ற்குப் பல வாய்ப்புகள் ஏற்படுவது இயல்புபோலும். ஆதலின் இப் பகுதியில் சிறப்பாக வணிகரைக் குறிப்பிடுவது உணரற்பாலது. கொள்வதும் மிகை கொள்ளாமல் கொடுப்பதும் குறை கொடாமல் ஒப்ப காடிச் செய்யும் திட்பம் வணிகர்க்கு இன்றியமையாத பண்பாகும். நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினேராய்ச் செய் யும் வாணிகமே வளர்ச்சியுறும் என்பது வள்ளுவர் உள்ளம். ஆகவே, "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோன் செயின்' என்று சிறந்த வணிகமுறையை விளக்கியருளினர். அடக்கம் ஒழுக்கத்தின் உச்சநிலையாகும். ஆத் லின் அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு காத்தல் வேண்டும். உயிர்கட்கு அதனின் மிக்க செல்வம் இல்லை என்று உரைத்தருளுவார். மறுமை. யில் தேவருள் ஒருவகை வாழ்விக்க அடக்கமே சிறந்த அறமாகும். அறநெறியினின்று பிறழாது அடங்கின வனது உயர்ச்சி மலையினும் மாணப் பெரிதாகும். இந்து உறுப்புக்களையும் தனது ஒட்டுள்ளே அடக்கிக் கொள்ளும் ஆமையைப்போல, ஒருவன் ஒரு பிமப் பின்கண் ஐம்பொறிகளேயும் கல்வழியில் செலுத்தும் ஆற்றல்மிக்க அடக்கம் உடையவனதல் வேண்டும். அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பிலும் அரணுகும் சிறப்புடையது. . இத்தகைய அடக்கமுடையாரைச் சிலர் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதுவர். அங்ங்னம் கருதினர் தம் கருத்து நிறைவேருது வருத்தமுறுவர்.