பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

  • 魔 வள்ளுவர் சொல்லமுதம்

யும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் என்றும் அவரை விட்டு அகலா. ஆதலின் பிறன் மனேயாளை மனத்தி லும் கருதாத மாண்பு பேராண்மை என்று போற்றத் தகும். இது சான்ருேர்க்கு ஆன்றமைந்த அறமும் அரிய ஒழுக்கமும் ஆகும் என்பர் தெய்வப்புலவர். பொறுத்தற்கு அரிய கொடுஞ்செயல் புரிந்தாரை யும் பொறுப்பது சிறப்புடை ஒழுக்கமாகும். "பொறுமை கடலினும் பெரிது என்பது பொன் போன்ற பழமொழி. நிலம் பொறுமை உடையார்க்கு உவமையாகச் சொல்லப்பெறுவது. தன்னை அகழ் வாரை வீழாமல் தாங்கும் பாங்குடையது கிலமன்ருே. அதுபோலத் தம்மை இகழ்வாரைப் பொறுப்பது தல் சிறந்த அறமாகும். அறிவின்மையால் மிகை செய்த மக்களைப் பொறுத்தல் வல்லமையுள் சிறந்த வல்லமீை யாக மதிக்கப்படும். பிறர், தமக்குச் செய்த திங்கைப் பொறுத்தாரை, உயர்ந்தோர் பொன்போல் பொதிந்து போற்றுவர். அதனைப் பொருது ஒறுத்தாரை ஒரு பொருளாகவே உள்ளத்தில் கொள்ளார். ஒறுத் தார்க்கு உண்டாவது ஒருநாளே இன்பமே. பொறுத் தார்க்கோ உலகம் அழியும் அளவும் அவர் புகழ் கின்று நிலவுவதாகும். அவர்கள் இல்லறத்தவராயி லும் துறந்தார்போலத் தூய்மை உடையவர் ஆவர். உண்ணுது நோற்கும் அத் துறந்தாரினும் பொறுமை யுடையார் சிறந்தவர் என்பது தெய்வப் புலவர் கருத்து. மக்களுக்குரிய ஒழுக்க நெறிகளுள் அழுக்காஇ. கொள்ளாத இயல்பும் ஒன்ருகும். பிறர் ஆக்கம் கண்ட விடத்துப் பொருமைப்படுதலே அழுக்காறு எனப்