பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவும் ஒழுக்கமும் - 75 படும். பொருமை உடையவனிடத்துத் திருமகள் தங்க விரும்பாள். மூத்தவள் தங்க ஏற்ற இடமெனக் காட்டித் தான் அகல்வாள். இதனேயே தமிழ் மூதாட்டி யார், ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு' என்று சுருங்க உரைத்தார். இவ் அழுக்காற்றைப் பாவி என்றே பழித்துப் பேசுவார் வள்ளுவர். இப்பாவி, தன்னை உடையானே இம்மையில் செல்வத்தைக் கெடுத்து, மறுமையில் நரகத்துள் செலுத்திவிடும். ' அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்' என்பது வள்ளுவர் வாக்கு. பிறருடைய பெரும்பொருளேக் கண்டு பொருமை கொள்ளுதலேயன்றி அதனைக் கவர்ந்துகொள்ளக் கருதுதலும் குற்றம் ஆகும். இதனே வெஃகாமை என்ற அதிகாரத்தால் விளக்குவர். ஒருவன் பிறனுக் குரிய பொருளை அறனின்றிக் கவர்ந்துகொள்ள விரும்புமாயின் அத்திய கினேவே அவன் குடியைக் கெடுக்கும்; பல குற்றங்களையும் அவனுக்குக் கொடுக் கும். நல்லறிவாளர் வறுமையால் அல்லலுறினும் அஷ் வறுமையினே ஒழிக்கப் பிறர் பொருளேக் கவர விரும் பார். அங்ங்னம் விரும்புவராயின் நூல்கள் பல கற்ற அவர்தம் நுண்ணறிவு என்ன பயனேத் தரும் என்று கேட்பார் வள்ளுவர். பிறன் பொருளை வெளவக் கருதின், அக் கருத்தே ஒருவற்கு உயிர் இறுதியைப் பயக்கும் என்பர். பிறர் பொருளேக் கவர்வதால் வரும் ஆக்கத்தை விரும்பாது ஒழிக. என்று வேண்டுவர். ஒருவன் கைப்பொருள் சுருங்காதிருக்கவேண்டின் பிறன் கைப்பொருளைக் கவர விரும்புதலாகாது என்று அறவுரை கூறுவர்.