பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வள்ளுவர் சொல்லமுதம் புறங்கூறுதல் தீய ஒழுக்கங்களுள் ஒன்ருகும். காணுத இடத்துப் பிறரை இகழ்ந்து பேசுதலே புறங் கூறல் எனப்படும். அறம் என்ற சொல்லேக்கூடக் சொல்லாது, பொல்லாத செயல்களை ஒருவன் செய்யு மாயினும் பிறனேப் புறங்கூருன் என்று போற்றம் பட்டால் போதுமானது என்று ஓதுவார் நம் பொய்யில் புலவர். ஒருவனேக் காணுதவழி இகழ்ந்து பேசிக் கண்டவழி அவனோடு பொய்யாக மகிழ்ந்து உரையாடுதல் எண்ணற்ற பாவங்களேப் பண்ணுதவி னும் தீமையாகும். அவ்விதம் புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்வதினும் சாதல் நன்று. புறங்கூறும் பொல் லாத மக்களின் உடற்பாரத்தையும் இந்த உலகம் பொறுக்கின்றது என்ன வியப்பு 1 என்று புறங்கூற். றின் கொடுமையைத் திறம்பெற விளக்குவார். கல்லொழுக்கம் உடையார் பயனற்ற சொற். களைப் பாரித்து உரையார். அங்கனம் உரைப்பா தாயின் அவர் நீதியிலர் என்பதை அறியலாம். திய சொற்களேப் பேசுவதும் தீய செயல்களைப் புரிவதும் ஒழுக்கம் உடையார் ஒருநாளும் இயற்ருர், அவற்றைத் தீயினும் கொடிய என்று அஞ்சுவர். தீயாரைக் காண் பதும் தீதென அகல்வர். தியார் சொல்லேக் கேட்க வும் அஞ்சுவர். தியார் குணங்கள் உரைக்கவும் காணு வர். தீங்கினர் சேய்மையில் வரக்காணின், கண்ணில் தெரியாத தூரத்தே நீங்குவதே நல்ல நெறியென்று நினைந்து விரைந்து அகல்வர். அன்னர் மறந்தும் பிறன் கேடு குழார். பிறர்க்கு உதவும் அறவுள்ளம் ஒழுக்கத்தின் ஒரு சுருகும். இதனே ஒப்புரவு என்று குறிப்பர் வள் ஞவர். வானகத்தும் வையகத்தும் ஒப்புரவுபோல