பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவும் ஒழுக்கமும் 77 உயர்ந்ததொரு செயல் வேறில்லை. தமது கடமையை உணர்ந்த உயர்ந்தோர் தம் செல்வம் குறைந்த காலத் தும் ஒப்புரவு செய்தற்கு உள்ளம் தளரார். நல்லகுடிப் பிறந்தார் நல்கூர்ந்தாரானலும் இல்லை என்று சொல்ல உள்ளம் நானுவர். உறுபுனல் தந்து உலகு ஊட்டிய ஆறு, வெள்ளப் பெருக்கற்றுச் செல்லுவார் அடி சுடும் வெப்ப நாளிலும் ஊற்றுப்பெருக்கால் கன்னிரை ஊட்டுமன்ருே ஆதலின் தம்மால் இயன்றதைப் பிறர்க்கு உதவுதல் ஏற்ற அறமாகும். அங்ங்னம் ஒப் புரவு செய்வதால் பொருட்கேடு வரும் என்று புகன்ரு லும் அக்கேட்டை, ஒருவன் தன்னே விற்ருயினும் பெறுதல் தகுதியே என்று அவ் ஒழுக்கத்தை வள்ளு வர் நன்கு வலியுறுத்துவார். : : உலகில் புகழ் நிலவுமாறு வாழ்வதே உயர்ந்த ஒழுக்கமுடையார்க்கு உரிய செயல் ஆகும். புகழ் இல் லாத மக்களின் உடம்பைச் சுமந்த நிலம் விளேயுள் குன்றி வளத்தை இழக்கும். புகழைப் பெறுதற்கு ஈதல் அறமே ஏற்ற துணையாகும். இரப்பவர்க்குக் கொடுப்பவரையே புகழ் நாடி வந்தடையும். ஆதலின், ' ஈதல் இசைபட வாழ்தல் அது வல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்று வள்ளுவர் அறிவுரை வழங்குவார். . . . . கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அவர் ஒழுக்கமற்றவராயின், அச் சிறப்பை இழப்பது உறுதி. அறிவும் ஒழுக்கமும் ஒருங்கு நிறைந்த சான் ருேரையே உலகம் போற்றும். அவர் வாய்ச்சொல் லேயே அருண்மொழியாகத் தலைக்கொண்டு போற்றும். வ. சொ.-6