பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${} வள்ளுவர் சொல்லமுதம் என்று தமிழ்மூதாட்டியார் வள்ளுவர் கருத்தையே மேலும் வற்புறுத்துவார். பொருள் தேடித் திரியும் மக்களைக் குறித்து அத் தமிழ்ச்செல்வியார் இரங்கிக் கூறும் மொழி கல் இதயத்தைத் தொடுவனவாகும். பாழான உடம்பைப் பாதுகாக்க நாள்தோறும் காழி அரிசி வேண்டுமே! வயிற்றின் கொடுமையால் சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் வாழ்நாளை வீணுகப் போக்குகின்ற துரே என்று அவர் இரங்குவார். ஒருவன் கல்லா தவளுயினுங் கைப்பொருளேப் பெற்றவயிைன், அவனே எல்லோரும் சென்று எதிர்கொள்வார்கள். இல்லானே மணந்துகொண்ட இல்லாளும் விரும்புவதில்லை. ஈன்ற தாயும் வேண்டாள். அவன் வாய்ச் சொல்லுக் செல்லாது என்று சொல்லுவார். இக் கருத்தையே வள்ளுவர் பெருமானும் மிகச் சுருங்கிய சொற்களால்.

இல்லாரை எல்லாரும் என்ஞவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு ? என்று தெளிவுற விளக்குவார். இல்லான் என்ற சொல், பொருள் இல்லாதவன், அறிவில்லாதவன் ஆகியோரைக் குறிக்கும். இல்லாள் என்ற சொல்லோ இல்லிற்கு உரிய நல்லாளே -- மனேக்கு உரிய தலைவியாகிய மனைவியை அன்ருே குறிக்கும் ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிக்கத்தக்கவராகச் செய்யவல்லது செல்வமே. அது கந்தா விளக்குப்போல்வது. அதனைப் படைத்த வர்க்குப் பகை என்னும் இருள் மறைந்தொழியும். எல்லோரும் சுற்றமாவர்.