பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளும் அருளும் 83. 'காலாடு போழ்திற் கழிகிளேஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர்? என்பர் சமண முனிவர். உலக வாழ்வுக்கு இன்றியமையாத செல்வம் கிலே பேறு உடையதன்று. நாடக அரங்கில் ஆடும் கூத் தினக் காண்பதற்கு மக்கட்குழாம் திரண்டு வருவது போன்றே ஒருவற்கு கல்வினை உளதாயின் செல்வம் வந்து சேரும். அவ் ஆகூழ் அவனேவிட்டு அகலு. மாயின், அக்கூத்து முடிந்தவழிக் காண்போர்குழாம் விரைந்து நீங்குதல் போல நீங்கிப்போம் என்பர் வள்ளுவர். காலையில் தோன்றி மாலையில் மறையும் கதிரவனைப் போலச் செல்வம் ஒருவற்குத் தோன்றி மறையும் இயல்புடையது. செல்வம் என்று உறுவ தற்குச் செல்வம் என்று உரைக்கும் பேர் கன்று என்று நவில்வார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். பொருட்செல்வமோ எண்ணற்ற பக்தங்களே இயைக்கும் ; தெய்வ சிந்தையை நீக்கும் , உறக் கத்தை ஒழிக்கும் , பிறவிக் கடலுள் புகுத்தும். செருக்கு வந்து மூடிக் கொள்ளும். அச் செல்வச் செருக்கினல் வாயுள்ளார் ஊமை ஆவர். செவியுள் வார் செவிடர் ஆவர். கண்ணுள்ளார் குருடர் ஆவர். இத்தகைய இழிந்த பண்புகளே உண்டுபண்ணுவதால், புலவர்கள் செல்வத்தை வெறுக்கை என்ற பெயரால் குறித்தனர் என்பர் மகாவித்துவான் பிள்ளையவர்கள். செல்வத்தின் கிலேயாமையை நாலடி நூலும் இன்கு விளக்கும். நூ. லி ன் தொடக்கத்திலேயே செல்வ கிலேயாமையைத்தான் செப்புகிறது. அந்நூல்