பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளும் அருளும் 85 மக்களின் தோற்றம், மாநிலத்திற்குப் பெரும் பாரமே யாகும். பல்கோடிச் செல்வம் தேடி அடைந்தாலும் அருளால் பிறர்க்குக் கொடுப்பதும் தாம் துய்ப்பதும் இல்லார் வறியரென்றே அறிஞரால் எண்ணப் பொருளைப் பெரிதும் தேடிய செல்வர்கள் அப் பொருளைக் காத்து வைக்கும் சிறந்த கருவூலம் வறிஞர் கள் வயிறே என்று இயம்புவர் வள்ளுவர். வறிஞரை வாட்டும் பசியை அகற்றுவது சிறந்த அறமாகும். பொருளே உணவாக மாற்றி அவர்தம் வயிருகிய இருப்புப்பேழையில் சேமித்து வைத்தால் அப் பொருள் இப் பிறவியில் மட்டுமே அல்லாமல் எடுக்கும் பிறவிதோறும் உறுதுணையாய் வந்து உதவும். அருள் நிறைந்த செல்வ வள்ளல் நடுவூருள். பழுத்த நன்மரத்திற்கு ஒப்பிட்ட நாயனர் வறியார்க்கு உதவாத செல்வனே நடுவூருள் பழுத்த கச்சு மரத்திற்கு, ஒப்பிட்டு உரைப்பார். உண்டவர் உயிரைக் கொண்டு மாய்க்கும் நச்சுப்பழத்தை நல்கும் பெருமரம் ஊரின் நடுவே உயர்ந்தோங்கி வளர்ந்து யாது பயன்? அது கனிகள் பலவற்றைப் பெற்றும் பயன் என்ன? எவரும் அவற்றை விரும்பார் ! அருகிலும் செல்லார். அது போலவே உலோபியை எவரும் விரும்பமாட்டார்கள். ஆதலின் பெற்ற பொருளால் அருளைப் பேணி ஆருயிர்க்கு அன்பு செய்தல்வேண்டும். அதுவே. அருள் வடிவான பரம்பொருளேக் காணுதற்கும். அவனது அருளேப் பெறுத்ற்கும் உரிய வழியாகும்.