பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. இறையருளும் நிறைமொழியும் இறைவன் எங்கும் நிறைந்தவன். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருள். அவன் இல்லாத இடமே இல்லை. உயிருள் உயிராகியும் அணு வுள் அணுவாகியும் ஒளிர்பவன். அவனன்றி ஒரணு வும் அசைவதில்லை. அறக் கடலாகவும் அருட்பெருங் கடலாகவும் அறிவுருவாகவும் திகழ்பவன். விருப்பு வெறுப்பு இல்லாத விமலன். இருவினைகள் சேராத இயல்பினன். தனக்கு உவமை இல்லாத தனிப் பெருமை உடையவன். இத்தகைய இறைவன் திருவடி, பிறவிப் பிணிக்கு மருந்தாய் விளங்குவது. அதனே வணங்குதலே அறி வுடையார் செயல். அதுவே கல்விப்பயன் ஆகும். அப்பெருமானின் திருவடிகளே இடையருது சிந்திப்பார் இன்ப உலகில் இனிது வாழ்வர். அவர்கள் எப் போதும்.எவ்விடத்தும் இன்னல் எய்தமாட்டார். இறை வன் திருப்புகழை விருப்புடன் ஒதுவார்க்கு இருவினைத் துன்பங்கள் வருவனவல்ல. அவர்கள் நிலைபெற்ற நல்வாழ்வு பெறுவர். பிறவிக்கடலை நீந்திப் பேரின் பக் கரையேறி மகிழ்வர். இருமைப் பயன்களையும் ஒருங்கு நல்கும் இறைவன் தாளே வணங்காத் தலை பாழுந்தலே என்று இறை உண்மையையும் அவன் அருள் வன்மையையும் இனிது விளக்குவார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். இறைவனது திருவருள் வடிவாகப் பொழிவதே மழை. ஆதலின் தமது திருக்குறட் பெருநூலில்