பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக ஊக்கமும் ஆக்கமும் வினை செய்தற்கண் கொள்ளும் உள்ளக் கிளர், சியே ஊக்கம் எனப்படும். ஊக்கமே வாழ்வில் உயர் வைத் தருவது. ஆதலின் ஊக்கமது கைவிடேல் என்று ஓதுவார் தமிழ் மூதாட்டியார் ஊக்கம் உடை யவர் எல்லாம் உடையவர் என்றே சொல்லப் பெறுவர். ஊக்கம் இல்லாதவர் என்னுடையரேனும் இலர் என்பர் வள்ளுவர். - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைபெற்ற செல்வம். பிற செல்வங்களே இழப்பினும் ஊக்கத்தின் உறுதுணேயால் அவற்றைப் பெறலாம். ஊக்கம் இல்லாதார் பெற்ற செல்வத்தைக் காக்கும் திறனின் றி இழப்பர். ஊக்கம் உடையார் கைப்பொருளை இழக் தாலும் ஐயோ! செல்வத்தை இழந்தோமே! என்று சிந்தை வருந்தார். வினை செய்யுங்கால் விளையும் இடை யூறுகள் பலவாயினும் அவை கண்டுமனம் வெதும்பார் சகடம் ஈர்க்கும் பகடுபோல ஊக்கமுடன் செயலாற்ற வல்லாரை வந்துற்ற துன்பமே துன்பப்படும் என்பர் தெய்வப் புலவர். - அயலூர்க்கு வழி அறியாதார் அறிந்தார்பால் வழி வினவிச்சென்று சேர்வார் அன்ருே அது போல இடர் கண்டு தளராத ஊக்கமுடையான் இருக்கும் இடத்தைத் தேடி, ஆக்கம் தானே அதர் வினய்ச் செல்லும். தாமரைத் தடாகத்தில் கிறைந்த தண்ணீர் ஆழத்தின் அளவினதாகத் தாமரை மலரது தாளின் நீளமும் அமையும். தடாகத்தில் நீர் பெருகு