பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வள்ளுவர் சொல்லமுதம் பொருளால் கொடையும், கொடையால் செருக்கும் முறையே உளவாகும். ஊக்கம் இல்லாது ஒழியவே முயற்சியும் பொருளும் கொடையும் செருக்கும் முறையே இலவாயின. ஆதலின் ஒருவற்கு உறுதி யான அறிவென்பது ஊக்க மிகுதியே. அஃது இல்லா தார் மக்களாகார், மரங்களாவார் என்பர் திருவள்ளு வர். கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் மரங்களோவெனின் காய் கனிகளைத் தரும்; தேவர் உறையும் திருக்கோவில், இல்லம், தேர், மரக்கலம் ஆகியவற்றிற்கு உறுப்பாக அமையும். ஊக்கமற்ற மக்களாய மரங்களோ எதற்கும் பயன்படா. மக்கள் எண்ணும் எண்ணங்கள் என்றும் உயர்ந் தனவாகவே இருத்தல் வேண்டும். அவற்றை அடை வதையே குறிக்கோளாகக் கொண்டு உழைக்க வேண் டும். ஊழ்வினை காரணமாக எண்ணம் நிறைவேற வில்லையாயினும் அவ் எண்ணத்தை விடுதல் கூடாது. " உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' என்பது வள்ளுவர் சொல்லமுதம். ஒருவன் வாழ்வினைக் கெடுப்பன நான்கு தீய பண்புகள். சோம்பல், விரைந்து செய்வதனை நீட்டித் துச் செய்யும் இயல்பு, மறதி, தாக்கம் என்பன அத் தீய பண்புகள். இந்நான்கும் ஊக்கத்தை அறவே ஒழிக்கும் திறமுடையன. கெடுரோர் காமக் கலன் என்றே இவற்றைக் குறிப்பார் வள்ளுவர். கேடுறுவார் நாடி அணியும் அணிகலன்கள் இத் தீக்குணங்கள். அவர்கள் பிறவிக்கடலுள். ஆழ்ந்து வருந்த விரும்பி தும் மரக்கலங்கள் என்றும் உரைக்கலாம்.