பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்கமும் ஆக்கமும் 89 மடியே மற்றைய மூன்றற்கும் பிறப்பிடமாய் அமைவது. ஊக்கம் உடையார்க்கும் ஒரு சில சமயங் களில் தாமத குணத்தால் சோம்பல் தோன்றும். அது தோன்றிவிட்டால், அவர் தோன்றிய குடி என் னும் குன்ருத விளக்கும் அணேந்துபோகும். மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் என்பார் வள்ளு வர். மடி உடையார் அழிதற்கு முன்னரே, அவர் பிறந்த குடி விரைந்து அழியும். சோம்பல் உடை யார்க்கு, நிலம் முழுதாளும் மன்னரது ள்ேசெல்வம், தானே வந்து சேர்ந்தாலும் அதன் பயனே அவர்கள் அடையார். அவர்கள் பிறரால் இகழ்ந்து பேசப் பெறுவர். தம் பகைவர்க்கு அடங்கியொழுகும் இழி நிலையை அடைவர். இங்ங்னம் மடியின் தீமையை விளக்கியருளினர் வள்ளுவர். - இடையே எழும் மடியை ஒழித்து, உள்ளத்தே ஊக்கம் பெருகியவன் உடல் உழைப்பும் உடையவ தைல் வேண்டும். அதனையே வள்ளுவர் ஆள்வினை யுடைமை என்று அறிவுறுத்துவார். இடைவிடாத மெய்ம்முயற்சியே ஆள்வினை எனப்படும். தொழில் ஆளும் தன்மையுடையது அம்முயற்சியாதலின் அதனை ஆள்வினை என்று குறித்தார். * ஊக்கமும் ஆள்வினையும் ஒருங்குடையான் எத்த கைய அரிய செயலேயும் எளிதில் முடிப்பான். அதனை முடித்தற்கு ஏற்ற பெருமையை முயற்சி தருவதாகும். * முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்பர் * முயற்சி திருவினை ஆக்கும்’ என்பது முதற்பாவல ரின் மொழி. முயற்சி என்னும் உயர்ந்த குணமுடை யாரே பிறர்க்கு உதவும் பெருமையினே அடைவர்,