பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{} வள்ளுவர்.செல்லமுதம் 'தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் என்பார் நல்லாதனர். தாளாண்மை என்னும் தனி முயற்சி யில்லாத ஒருவன், எல்லோர்க்கும் உதவும் வள்ளலாக விளங்க வேண்டும் என்று விரும்புவது மடமையாகும். படை கண்டால் அஞ்சும் பேடி, போர்க்களத்தில் வாளேந்தி கின்று யாது பயன்? அவனே எதிர்த்துப் போராடு வாரும் இலராவர். வாளும் அவனது கையில் வாளா இருக்கும். அப் பேடி, வாளேப் பணி கொள்ளும் கருத் துடையயிைனும், அது தன் அச்சத்தால் முடியாத வாறு போல, முயற்சி இல்லாதவன் பலர்க்கும் உத வும் கருத்துடையயிைனும் அது தன் வறுமையால் முடியாது அன்ருே விடாமுயற்சி உடையவன் வினை முடித்தலேயே விரும்புவான். அவன் தனக்கு இன்பத்தை விரும் பான். அவனது முயற்சிக்குத் திருமகளும் துணையாக கின்று வினைமுடிப்பாள். அவன் தன் உறவினரா கிய பாரத்தின் உறுதுயரை நீக்கி அதனைத் தாங்கும் துரண் ஆவான். அவனது செயலேத் துணையாக முன் னின்று முடிக்க இன்னருள் ஈசனே எளிவந்து நிற் பான் என்பர் வள்ளுவர். தெய்வம் மடிதற்றுத்தான் முந்துறும் என்பது அவரது வாக்கு. ஒருவன் முயன்ற வினைக்குத் தெய்வம் துணை நின்றவழி அளவின் மிக்க பயனைத் தரும். முயற்சி ஒன்றே துணையாக வினே செய்வாற்கு, உடம்பு வருந்திய வருத்தத்தின் அளவு, கூலி வந்துசேரும். ன்ேவரு - பது வள்ளுவச்சொல்லமுதம்.