பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானமும் தமுைம் 7 நியதிர்ப்பை என்று குறிக்கப்படும். அளவு குறித்து வாங்கி அவ் வாங்கியவாறே எதிர்கொடுப்பதுதான் குறியெதிர்ப்பை எனப்படுவது. இவ் ஈதல் அறமே வீட்டுலகிற்கு ஏற்ற நெறியாகும். ஈந்தார்க்கு அவ் வுலகம் இல்லையென்று யாரேனும் கூறுவராயினும் ஈதலே நன்று என்று வலியுறுத்தினர் வள்ளுவர். 'ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொன்னெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” என்று இரவின் இழிவையும் ஈதல் உயர்வையும் வலியுறுத் தினர் பழம்புலவர். உலக முழுவதையும் ஒரு குடைக் கீழ் ஆளும் அரசனுக்கும் அல்லும் பகலும் துஞ்சாது அஞ்சாது காட்டகத்தே கொடிய விலங்குகளை வேட்டையாடும் வேட்டுவனுக்கும் ஊணும் உடையும் பிறவும் எல்லாம் ஒக்கும். ஆதலின் ஒருவன் ஈட்டிய செல்வத்தின் பயன் ஈதலே. அதனைச் செய்யாது செல்வத்தை நாமே நன்ருகத் துய்ப்போம் என்று கருதின் தப்பிப்போவன பலவாகும் என்று அறவுரை வழங்கினர் நக்கீரர். தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி. வெண்குடை நிழற்றிய ஒருமை போர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவத்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டிே பிறவும் எல்லாம். ஒரொக்கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புத பலவே' என்பது நக்கீரருடைய நயந்தரு பழம் பாடல். - செல் வத்துப் பயனே ஈதல்' என்ற சிறந்த உண்மையை