பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாைகிமையுக் அங்கையுக் g? பாரத நாட்டிற்குப் பூரண விடுதலே கிடைக்குமாறு: செய்த சுதந்திரத்தந்தை காந்தியடிகள் காத்த பேரறங்கள் வாய்மையும், இன்னு செய்யாமையும் ஆகும். அவற்றையே சத்தியம், அகிம்சை என்று வடமொழியில் வழங்குவர். காந்தியடிகள் இளமையில் அரிச்சந்திர நாட கத்தைக் கண்ணுற்ற நாளிலிருந்து வாய்மை அறத்தைப் பேணிக் காத்து ஒழுகினர். அதனுல் இன்று உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் ஒளி வீசும் சுடர்மணி விளக்கா விஞர். ஆகவே, வாய்மை காக்கும் அறம் வையமெல்லாக் போற்றும் நல்லிசையை யன்ருே உண்டு பண்ணுகிறது. பொய்ம்மொழி ஒருவனது வாழ்வையே பாழ் செய்துவிடும். பொய் சொன்ன வாய்க்குப் போசனம் இல்லை என்பர். பொய் சிதைக்கும் பொன்போலும் மேனியை' என்பர் விளம்பி நாகளுச். ஒருவன் உரைப்பது: பொய் என்பதைப் பிறர் அறிவாசாயின் அவனே எத் துணையோ அல்லல்கட்கு உள்ளாக்குவர். அதனைப் பிறர் அறியாதொழியின் அவனது நெஞ்சமே சான் ருக நின்று நெடிது வருத்தும். இதனுலேயே தமிழ் மூதாட்டியார் நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பேசந்தார். இதனை வள்ளுவரும், 'தன்னெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்' என்று வலியுறுத்திஞர். மருதனிள நாகளுர் என்னும் பெரும் புலவர் வறுமை புற்று மனைவி மக்களுடன் வாடி நாடு நீங்கிச் செல்கின்ளுர், வீட்டிலுள்ள பொருள்களைத் தலையிலும் தோளிலுமாகச் சுமந்துகொண்டு வருந்தி வழி நடக்கின்ருர்கள். மெல் லியல் நல்லாளாகிய அவரின் மனைவி கல்லிலும் முன் ளிலும் கால் பெயர்த்து தடக்க முடியாது தட்டுண்டு தடு.