பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிவும் இனிவுக் జీ முன்னின் ருெருவன் முகத்தினும் வாயினும் கல்தின் துருகக் கலந்துரைத்துப்-பின்நின்று இழித்துரைக்கும் சான்ருேரை அஞ்சியே தேவர் விழித்திமையார் நின்ற நிலை’ என்பது அவர் காட்டிய அறநெறி. குணமென்னும் குன்றேறி நின்ற நல்லார் வாயில் இன்சொல் பிறப்பதே இயல்பாயினும் பிறர்க்கு அற வுரைகளை இடித்துரைக்குங்கால் வன்சொற்களும் பிறக்க லாம். அவ் வன்சொற்கள் பிற வன்சொற்களைப் போலாது நன்மையையே விளக்கும் என்று நவின்றருளிஞர் குமரகுருபரர். வெங்காரம் தீயைப் போன்று வெம்மை நிறைந்ததாயினும் உடம்பில் தோன்றும் புண்ணைப் போக் கவல்லது. சிங்கி என்னும் மருந்து அருந்துவதற்குக் குளிர்ந்து இருந்தாலும் உண்டவரைக் கொல்லும் கொடுமையுடையது. இவற்றைப் போன்றே நல்லார் சொல்லும் வன்சொல் நலம் பயக்கும் என்றும் தீயார் கூறும் தீஞ்சொல் தீங்கு விளக்கும் என்றும் அறிவுறுத் திஞர் அவ் அடிகளார். 'இனியவர் என்சொலினும் இன்சொல்லே இன்னுர் கனியும் மொழியும் கடுவே-அனல்கொளுந்தும் வெங்கரம் வெய்தெனினும் நோய்தீர்க்கும் மெய்பொடிப்பக் சிங்கி குளிர்ந்தும் கொலும்' என்பது அவரது நீதிநெறி விளக்கம், இச். செr. 4 ساس