பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போறையும் பொருமையும் 羈麗 "பிழையிலான் கடவுளன்றி மக்களில்தப் பில்லாதார் பிறரும் உண்டோ ? மழையினுமே அசனியுண்டு மதிக்குமோர் மறுவுண்டு மலர்க்கு முள்ளாம் கழையிலுமே சக்கையுண்டு கனியினும்தோல் கொட்டையுண்டு கதிக்கும் காம விழைவினுல் மறப்புரிதல் நதர்க்கியல்பா தலின் அவரை வெறுக்கெ ஐதே' என்று பிறர் பிழை பொறுத்தலின் அவசியத்தை மாயூரம் வேதநாயகர் விளக்கினர். மாநிலம் செழித்தற்கு மழை பொழியும் மேகத்திடமும் இடியிருக்கக் காண்கிளுேம். தண்ணிலவைச் சொரியும் வெண்மதியிடத்தும் களங்கம் ஒன்றைக் காண்கிருேம். நறுமணம் தரும் நண்மலரிடத்தே முள்ளிருக்கப் பார்க்கிருேம். தித்திக்கும் சாற்றைத் தரும் தீங்கரும்பிற்கும் சக்கை இருக்கிறது. சுவை மிகுந்த கனி தளுக்குத் தோலும் கொட்டையும் மேலும் உள்ளும் குற்ற மாகப் பற்றியுள்ளன. இவற்றைப் போலவே மக்களிடத்து இயற்கையாகக் குற்றம் குறைவாகவும் மிகுதியாகவும் இருக்கிறது. நல்லவை எல்லாம் தம் கடனெனக் கொள்ளும் தல் லோர் பிறர் குற்றம் பொறுத்தலும் தம் கடமையெனப் போற்றுதல் வேண்டும். பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடிமை போற்றி' என்று குறித்தருளிஞர் மணிவாசகர். சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம், பெரியோராயின் பொறுப்பது கடனே என்று குறிப்பிட்டார் அதிவீரராமர். சிறியோர் பெரும்பிழை செய்தனராயின் பெரியோர் அப்பிழையைப் பொறுத்தல் அரிது’ என்றும் அறிவுறுத்தினர்.