பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறையும் போருமையும் 菇莎 தான்மணிக்கடிகை, "தீங்கு செய்தார்மேல் சினம்கொள் ாாது பொறுப்பதே அவரை வெல்லுதற்கு தல்லவழி யென்று சொல்லும். துறந்தவர் மிகவும் சிறந்தவர். அவரது பெருமையை அளப்பது, உலகில் பிறந்திறந்தாரை எண்ணுவதற்கு, ஒப்பாகும் என்பார் வள்ளுவர். அத்தகைய துறந்தா சினும் பொறுமையுடையார் தூய்மையுடையவர் என்பார். அன்னவர் பெருமையெல்லாம் பொறுமையுடையாது. பெருமைக்குப் பின்னதாகவுே மதிக்கப்படும். இல்லறத்தில் இருந்தே பற்றுக்களை விடாமல் பொறுமையுடையவர், பற்றுக்களை விட்டுத் துறவறத்தை அடைந்த பொறுமை புடையவரினும் பெருமையுற்றவர் அன்ருே ! இத்தகைய பொறுமையுடையார்க்கு ஒருநாளும் துன்பம் உறுவதில்லை என்று உரைத்தது நாலடியரச். அறியவேண்டுவன அறிந்தோரே பொறையின் உறை புளாவர். அவர் அஞ்சுவது அஞ்சி, அருஞ்செயல்களே உலகம் மகிழப் புரிந்துதவுவர். இத்தகைய நற்பண்பு களால் பொறையுடையார் என்றும் இன் புற்று வாழும் இயல்பினர் ஆவர். அவர்க்கு எந்நாளும் துன்பம் ஏற்படுவதில்லை.

  • அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி

உறுவ துலகுவப்பச் செய்து-பெறுவதனுல் இன்புற்று வாழும் இயல்பினுச் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது’ என்பது சமண் சான்ருர் ஒருவரின் உறுதிமொழி. இத்தகைய பொறையினுக்கு மறுதலையான தீய பண்பே பொருமை எனப்படுவது. அதனை அறவே விலக்குதல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த விரும்பிய பெருநாவலர் தமது நூலில் பொறையுடைமை என்ற அதிகாரத்தை அடுத்தே பொருமையையும் விளக்கத்