பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鳄等 வள்ளுவச் சொல்லமுதம் தலைப்பட்டார். வள்ளுவர் இப் பொருமையை அழுக்காறு என்னும் சொல்லால் குறிக்கிருச். இச்சொல் அழுக்கு, ஆறு எனப் பிரிந்து, தீயவழி என்றும் பொருள் தரும். அழுக்கறு என்னும் பகுதி, அழுக்காறு என்று திரிந்து வந்த தொழிற் பெயராகவோ, பண்புப் பெயராகவோ நின்று ஒரு சொல்லாகவும் பொருளைத் தரும். தீய பண்புகளை விலக்கவேண்டும் என்பதை விளக்கும் தெய்வப் புலவர் அப் பண்புகளையெல்லாம் எதிர்மறைச் சொல்லால் குறிக்கும் திறம் வியக்கற்பாலதாகும். அழுக்காற்றை விளக்கப் புகுந்த இப் புலவர் அழுக்காருமை என்தே குறிக்கிருர், இதே முறையில் வெஃகாமை, புறங்கூருமை, பயனில சொல்லாமை, கள்ளாமை, வெகுளாமை, கொல் லாமை, இன்ஞ செய்யாமை முதலாய தலைப்புகளை அமைத்திருப்பதைக் காணலாம். அழுக்காறு என்பது யாது ? அயலார்க்கு உண் டாகும் நன்மைகளைக் கண்டு உள்ளம் பொருதிருத்தலே அழுக்காறு எனப்படும். அதனைச் செய்தல் தகாது என்பதை அதிகாரத் தலைப்பிலேயே குறிப்பிடும் சிறப்பை அழுக்காருமை என்ற சொல்லால் அறிகின்ருேம். இவ் அழுக்காற்றை உள்ளத்தில் கொள்ளாத நல்லியல்பை ஒருவன் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும் என்ருர் வள்ளுவர். அப் பண்பினைப் பெற்றவள் ஒப்பில்லாத சிறந்த பேற்றினை உற்றவன் ஆவான். பொருமையுடையவன் மறுமைக்கு அறத்தையும் இம்மைக்கு ஆக்கத்தையும் வேண்டாமென்று வெறுப் பவன். அறிவுடையார் இத்தீய எண்ணத்தால் தமக்கு இருமையினும் விளையும் துன்பத்தை அறிந்து பொருமை கொள்ளார். பொருமை உடையார் கேடு அடைவதற்குப் பகைவர் வேண்டா. அத்திய பண்பே பெருங்கேட்டை விளப்பதாகும். அவரிடம் திருமகள்தானும் இருக்கட் பெருது. தன் தவ்வையாய மூதேவிக்கு இடமளித்து நீங்குவாள். இருமைத் துன்பமும் ஒருங்கு நல்கும். இத்