பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. மறமும் மானமும் மறம் என்னும் சொல், வீரத்தைக் குறிக்கும் , அறம் என்பதன் மறுதலைச் சொல்லாகவும் அஃது அமையும். அறத்திற்கு மாறுபட்ட மறமோ தீவினை என்று பொருள் படும். வீரத்தைக் குறிக்கும் மறமோ பொருட்சுவை ஒன்பதனுள் ஒன்ருக விளங்கும். நகை, அவலம், இழிப்பு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை, சமனில் என்னும் பொருட்சுவை களுள் ஒன்ருகிய வீரத்தைத் தொல்காப்பியர் பெருமிதம் என்று குறிப்பார். யாவரோடும் ஒப்ப நில்லாது மேம்பட்டு திற்றலின், பெருமிதம் என்ற சொல்லால் அவ் வீரம் குறிக்கப்படுகின்றது. கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கனுள் ஒன்றன் காரணமாகப் பெருமிதம் பிறக்கும் என்று தொல்காப்பியர் குறிக்கிருர். இவற்றுள் போர்ச் செயலிற் காட்டும் வீரமே தறுகண் எனவும் மறம் எனவும் குறிக்கப்பெறும். கல் தோன்றி மண் தோன்ருக் காலத்தே வாளோடு முற்ருேன்றி மூத்த குடியினர் தமிழர். ஆதலின் தமிழர் என்றும் குன்ருத பெருவீரம் படைத்தவ: ராவர். அவரது இணையற்ற வீரத்தைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. புறநானூறு என்னும் தொகைநூல் தமிழர் மறவாழ்வின் திறத்தையே புலப் படுத்துவதாகும். பதிற்றுப்பத்து என்னும் பழந்தமிழ் நூல் சேரமன்னர் பதின்மருடைய வீரவாழ்வை விளக்குக தாகும். பிற்காலத்துப் போர் வீரத்தைப் புலப்படுத்தும் சிற்றிலக்கியமாகப் பரணி என்பதொரு நூல் எழுந்தது. 'பரணிக்கோர் சயங்கொண்டார்’ என்று பாராட்டப் பெற்ற பைந்தமிழ்ப் புலவர் பாடிய கலிங்கத்துப்பரணி தலைமை சான்ற போர் இலக்கியமாகும். கோச்செங்கட்