பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1றைமுக் காணமும் 蕊麗 தேறப்படும் தேற்றமும் அன்னவர்க்கே அமையும். இம் பண்புகளே சிறந்த படைக்கு அரணுகும். 'மறம்மானம் மாண்டி வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு' என்பார் வள்ளுவர். படை மறவர் உயர்ந்த தோற்றப் பொலிவு உடைய' ராகவும் இருக்க வேண்டும். பகைவரை அழிக்கும் ஆற்றலும் அவரது எதிர்ப்பைத் தாங்கும் ஆற்றலும் குறைந்திருப்பினும் மறவர் தம் தோற்றப் பொலிவு ஏற்றத்தைத் தருவதாகும். அதுவே பகைவர்க்கு அச்சத்தையும் விளக்கவல்லது. வீரர்களுடைய உள் எத்தில் வெறுப்புணர்ச்சியும் வாழ்வில் வறுமையும் தோன்றலாகாது. அவர்களை முன்னின்று நடத்தும் மொய்ம்புடைய தலைவர்களும் வேண்டும். இவையெல்லாம். ஒருங்கமைந்த படைவீரரே வெல்படை வல்லார் ஆவர். தமிழ் மறவரது தலைசிறந்த வீரத்தை வள்ளுவர் படைச்செருக்கு என்னும் பகுதியில் தெளிவுறச் சொல்லு, வார். பகைவரை வெகுண்டு நோக்கிய விழிகள் அவர் வேலைக்கொண்டு எறிய அஞ்சி இமைத்தலும் செய்யார். அங்கனம் இமைப்பது பகைவர்க்குப் புறங்கொடுப்பு தாகும் என்று எண்ணுவர். போரில் பகைவருடைய படைகளால் முகத்தினும் மார்பினும் படும் புண்களே விழுப்புண்களென விரும்பியேற்பர். அவைகளை வீரத் திருமகள் முத்தமிட்டளிக்கும் மூத்திரைகள் என்றெண்ணிச் சித்தம் குளிர்வர். அத்தகைய விழுப்புண்படாத நாட் களைப் பயனின்றிக் கழிந்த வீழ்நாட்களென எண்ணி வருந்துவர். பகைவர்பால் வஞ்சினம் கூறி, அது தப்பாது வெல்ல முற்படுவர். அவ்வஞ்சினம் தவருதிருக்கத் தமது உயிரையும் போக்குவர். தம்மைப் புரத்த தலைவர்கள் கண்ணிர் சொரிந்து வருந்துமாறு போரில் இறத்தொழி