பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறமும் மானமும் இ8 ஒருவனது குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க, வேண்டும். அதனை நிறைவேற்ற இடையருத பெரு யற்சியும் இருத்தல் வேண்டும். அதஞல் விளைவது தோல்வியானும் அத் தோல்வி குற்றமாகாது என்று கூறுவார் வள்ளுவர். 'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல், கற்றது தள்ளினும் தன்னாமை நீர்த்து' என்பதன்ருே அவரது சொல்லமுதம். குறிக்கோளும் முயற்சியும் கொள்ளாதவனே குற்றமுடையவன். பயனத் தரும் நல்லூழ் இல்லாமை எவர்க்கும் பழியாகாது. செயல் முயற்சியில்லாமையே பழியாகும் என்று பகர்வார் வள்ளுவர். யானையை வேட்டையாட விரும்பிக் காட்டகம் புகுந்த வீரன் சிலவேளைகளில் யானையையும் பெறுதல் கூடும், காடை முதலான சிறு பறவைகளை நாடிச் சென்றவன் சிலவேளைகளில் அவற்றையும் பெருமல் வறிதே திரும்பலாம். ஆதலின் மக்களது நோக்கம் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்று புலவர் ஒருவர் அறிவுறுத்தினர். 'யானை வேட்டுவன் யானையும் பெறுகே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே! என்பது அப் புலவர் மொழியாகும். விண்ணில் குறி வைத்துச் சுடுகின்றவன் தவறிஞலும், மரத்தில் குறி வைத்துச் சுடுபவனைவிட உயரமாகவே சுடுவான்' என்று ஜியார்ஜ் ஹெர்பர்ட்டு (George Herbert) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். இதலுைம் யானை பிழைத்த வேல் பிடித்தல் பெருமையளிப்பதே' என்னும் வள்ளுவர் கருத்து வலியுறுவதாகும். பகைவரிடம் சிறிதும் இரக்கம் காட்டாமல் செய்யும் மறத்தை, அறிஞர் பேராண்மை என்று குறிப்பர். அப்