பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗垒 ள்ைளுவச் சொல்லமுதம் முருகிஞர். அவனை ஒருபொழுதும் கண்டு பேசிப் பழகர திருந்தும் அவனிடத்து உயிர் நட்புப் பூண்டார். அவன் பால் தாக் கொண்ட அன்பு உரிமையால் தம் பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது, ‘என் பெயர் சோழன்' என்று அவன் பெயரைத் தம் பெயராகச் சொல்லும் இயல்புடையதாய் இருந்தனர். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரது பெருந் தமிழ்ப் புலமையையும் அருங்குண நலன்களையும் கேள்வி யுற்ற நாள் முதல் அவரை உள்ளத்தே ஆருயிர் தண்ட செனக் கொண்டு மகிழ்த்தான். பலகால் அப் புலவரை நினைத்து அகம் குழைந்தான். அவன் வடக்கிருந்து உயிர் நீக்க முற்பட்டபோது, என் நட்டாளராகிய பிசிராந்தையார் இப்போது என் நிலைமையைத் தெரிந்து விரைந்து இங்கு வந்து சேருவார்' என்று தன்னுடன் இருந்த அருந்தமிழ்ச் சான்ருேர்க்கு உறுதி தோன்ற உசைத் தான். அங்ங்னமே சோழன் வடக்கிருந்த செய்தியைக் கேள்வியுற்ற பிசிராந்தையார், 'எம் ஆருயிர் நண்பனுடன் பாமும் வடக்கிருந்து உயிர்நீப்பேம் என உறுதிபூண்டு, சோழன் இருந்த இடத்தை வந்தடைத் தார். தாமும் அவனுடன் உயிர் நீத்தார். இவரது தட்பின் பேராற்றலேக் கண்டு வியந்த பெருந்தமிழ்ச் சான்ளுேள் பலவாறு பாராட்டினர். கோப்பெருஞ் சோழ லுடன் வடக்கிருந்த பிசிராந்தையாரைக் கண்ட கண்ண கஞர் என்னும் கவிஞர், சான்ருேச் சான்ருேரைக் கூடி யொழுகுவர், சாலார் சாலார் பாலராவர்” என்று கட்டுரைத்தார். இதனையே தமிழ் மூதாட்டியாரும், 'கற்ரு மரைக்கயத்தில் நல்ன்ைனம் சேர்ந்தாற்போல் கத்ருரைக் கற்ருரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் கணக்கை உகக்கும் பிணம்' என்று விளக்கியருளிஞர். قتيخة