பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(இரண்டாம் புத்தகம்) க. தானமும் தவமும் வள்ளுவர் சொல்லமுதின் தெள்ளிய தீஞ்சுவைவை உள்ளவாறு கண்டுணர்ந்து சொல்லிய உரைவல்லாச் பல்லோருள்ளும் ஒப்புயர்வற்று ஒளிர்பவர் பரிமேலழகர் என்பதை எவரும் அறிவர். அதஞலேயே உமாபதி சிவளுர், தெள்ளு பரிமேலழகர் செய்த உரை என்று தேர்ந்து போற்றுவாயினர். பாலெல்லாம் நல்லாவின் பாலாமே பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலமோ-நூலிற் பரித்தஉறை யெல்லாம் பரியே இழகன் தெரித்த உதை யாமே தெளி.' இங்ங்ணம் வள்ளுவன் நூலேயும் அதற் வாய்த்த பரிமேலழகர் உரையையும் மற்ருெரு புலவர் வியந்து போற்றிஞர். இத்தகைய புலமை நலம் கனிந்த தலைகை சான்ற உரையாசிரியராகிய பரிமேலழகர், தானம் தவமிரண்டும் தங்க வியலுலகம் வானம் வழங்கா தெனின் என்ற குறட்பாவுக்கு விளக்கம் கூறுமிடத்துத் தானம், தவம் ஆகிய இரு சொற்களின் பொருள் நலத்தைத் தெளிவுற விளக்குகின்ருர்,