பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐன்ஞனர் சோல்ல மூதக் பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்' 3. என்று சொல்லியருளிஞர். மக்களுள் முழுதும் குணமே நிறைந்தாரும் முற்றிலும் குற்றமே நிறைந்தாரும் எவரும் இலச். ஆதலின் ஒருவரது குணத்தையும் குற்றத்தையும் நன்கு நாடி, அவற்றுள் மிக்கன யாவையென்பது அறிந்து, அவரைக் கொள்ளு தலே தள்ளுதலோ செய்தல்வேண்டும் என்பச் வள்ளுவர். பெரியராயிஞர், பிறர் தம் பெருமைக் குணங் களையே விதந்து பேசுவர். குறைகளைத் தம் வாயால் கூரு.ே அத்றம் மறைக்கும் பெருமை, சிறுகைதான் குற்றமே கூறி விடும்’ என்பது வள்ளுவர் சொல்லமுதம், மற்றவரால் பெரியரென மதிக்கப்பட விரும்பும் மக்கள் சில நற்பண்புகளைக் கைக் கொள்ளவேண்டும் ; அவற்றை மறவாமல் நோன் பெனக்கொண்டு ஒழுக வேண்டும் என்பர் குமரகுருபரர். பிறரது சிறந்த குணங்களை விரித்துப் பேசுவதையும், இழிந்த குற்றங்களை அறிந்திருப்பினும் அவற்றைக் கூருது உள்ளத்துக் கொள்வதையும், எவர்க்கும் பணிந்த இன்சொல்லே வழங்குவதையும் பெரியார்கள் விரதமெனக் கொள்ள வேண்டும் என்று விளக்குவார். பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவன் யாண்டும் மதவாமே நோற்பதொன் துண்டு-பிறர்பிறர் சீரெல்லாம் துரத்திச் சிறுகை புறங்காத்து யார்யார்க்குள் தாழ்ச்சி செலல்’ என்பது அவர் காட்டும் நீதிநெறி.