பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமையும் கயமையும் 63 'குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பேரும்புணே வீடுடம் நாணணி களையும் B:ணெழில் சிதைக்கும் பூணணி மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி' என்பது அப் புலவரது பொன்மொழியாகும். க. குடிமையும் கயமையும் உயர்ந்த குடியில் பிறந்தாது தன்மையே குடிமை யெனப்படும் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் பழங்குடியே சிறந்த குடியெனப் பாராட்டப்படும். வாழை யடி வாழையெனச் சிறந்து விளங்கிவரும் பழங்குடி மக்கள் தம் பண்பில் என்றும் மாறுதலிலர். செல்வம் சுருங்கிய காலத்தும் தமது தொன்மைப் பண்பில் சுருங்காத அருங் குடி மக்களின் பெருமையே குடிமையெனப்படும். சிறந்த குடியில் பிறந்த பெருமக்கள் கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறுபடாத செம்மையுடை யோராவர். பழி பாவங்கட்கு நாணும் பண்புடையோ ஏாவர். தமக்குரிய ஒழுக்கத்தில் னந்தாளும் தவற மாட்டார். வாய்மையில் வழுவாத தூய்மையானவர். இத்தகைய கற்பண்புகள் எல்லாம் அவர்கள் பால் இயற்கையாகவே அமைந்திருக்கும். எக்காலத்திலும் மாறுதலில்லாத சீரிய குடியில் தோன்றிய செல்வர்கள் தம்மை நாடி வரும் வறியோரை