பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醫 இரீஇ ளுவர் சொல்லமுத! %. (மூன்ரும் புத்தகம்) க. நாடும் அரசும் நிலத்தை நால்வகையாகப் பகுப்பர் நல்லறிஞர். அவை நாடு, காடு, மேடு, பள்ளம் என்று சொல்லப்படும். இயற்கை யமைப்பிற்கேற்பக் குறிஞ்சி, முல்லே, மருதம், நெய்தல் என்றும் பகுப்பதுண்டு. இவற்றுள் மக்கள் மகிழ்ந்து வாழ்தற்குரிய நிலப்பகுதி நாடேயாகும். நாடு என்ற சொல்லே அழகுற அமைந்துள்ளது. விரும்பு' என்பது அச் சொல்லின் பொருளாகும். எல்லோரும் விரும்புதற்குரிய பெருவளம் படைத்த நிலமே நாடு என்று இவிலும் தகுதியுடையது. மக்கள் விரும்பி உறையும் நிலப்பகுதிக்குத் தக்க வகையில் ஆராய்ந்து பெயரமைத்த ஆன்ருேர் திறத்தை என்னென்பது இக் கருத்தை வள்ளுவர் சொல்லமுதமாகிய குறட்ப இனிது விளக்கும். "தாடிென்ப நாடி வனத்தன, கண்டில்ல நாம் வளந்தரும் நாடு' தாட்டில் வாழும் மக்கள் தாடி வருந்தாமல் அவுர்பால் தானே அடையும் செல்வம் ஒரு நாட்டில் தழைத்தோங்கி இருக்க வேண்டும். அத்தகைய நாட்டையே நல்லறி ஆாளச் சிறந்த நாடென வியந்து போற்றுவர். பெரிதும் தேடி வருந்த அரிதாகச் செல்வம் அட்ைவிக்கும் நாடுகள்