பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளும் கவதும் 岳器 பவர் கீழோராவர். கள்ளுண்ணல் அறிவை மயக்கிக் கெடுத்து விடுகின்றது. அவ்வறிவை இழந்துவிட்டால், வாழ்வு பாழும் நரகமாக மாறிவிடும். இந்த உண்மையை உணர்ந்த சான்ருேள் கள்ளைக் கடிந்து ஒழித்தனள் இங் கனம் எடுத்தியம்பிய சாதுவன் பாதங்களே நாகர் தலைவன் பணித்து வணங்கிஞன், கள்ளுண்டலால் கணக்கிலாத் தீமைகள் விாேவன போன்றே சூதாட்டத்தினுலும் சொல்லவொண்ணுத தொல்லகள் சூழ்வனவாகும். நிடத நாட்டை ஆண்ட நளன், புட்கரனுடன் ஆடிய சூதாட்டத்தில் நாடும் செல் வமும் இழந்து வருத்திஞன். மனேவியையும் மக்காேகம் அழைத்துக்கொண்டு வனம் புகுந்தான். காட்டிலும் அவர் களைக் காக்க முடியாமல் தனியே அவர்களைவிட்டுப் பிரிந் தான். வடிவை மறைத்து வாகுகன் என்ற பெயருடன் அயோத்திமன்னன் அரண்மனையில் மடைத்தொழில் புரிந் தான். பாண்டவரும் கெளரவரும் சூதாடிய வரலாற்றைப் பாரதம் பரக்கக் கூறும். பாண்டவர் சூதாட்டத்தால் தமது தாயபாகமாகிய நாட்டைவும் அரசையும் இழந்து காட்டகம் புகுந்தனர். கெளரவர் சூதாடிக் கவர்ந்த அரசையும் போரில் இழந்து மாண்டொழிந்தனர். நாடாளும் மன்னர்க்கும் சூதால் இத்தகைய இன்னல்கள் விளேயு மெனின் மற்றையோர்க்கு என்னுகும் ! சூதாடு கருவிக்குக் கவறு என்பது ஒரு பெயர். அது கொண்டு ஆடப்பெறும் விளையாட்டும் கவறு எனப்படும். அக் கவற்ருல் விளையும் பெருங்கேட்டை விளக்க வந்த வள்ளுவர், 'சூதினை வேண்டற்க’ என்று மிகவும் பரிவுடன் அறிவுரை கூறிஞர். ஒருவனுக்குச் சூதாட்டத்தில் வெல் லும் வல்லமை திசம்பவுள்ளது ; மேன்மேலும் வெற்றியும் விளைந்து கொண்டிருக்கிறது; அத்தகையானும் சூதாடுதல்