பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வள்ளுவர் 'சொல்லமுதம் மாறு தெரிந்துரைக்க வேண்டும். அவனே கல்லாற்றில் செல்லுமாறு அடக்கி நடாத்தவேண்டும். அவன்பால் அன்பையும் அறத்தையும் தவருமல் காத்தல் வேண்டும். தம்பால் பழி வாராது அறவழியில் செல்லுதல் வேண்டும். அதல்ை பிறரினும் உயர்ந்து பெரும்புகழைப் பெறுகல்வேண்டும். இங்ஙனம் செய லாற்றிய திறத்தால் அரசனுல் காவிதிப் பட்டமளித் துப் பாராட்டப்பெற வேண்டும். அன்னவரே செம்மை சான்ற நல்லமைச்சர் என்று குறித்தார் மாங்குடி மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல நன்றும் தீதும் கண்டு) ஆய்ந்து அடக்கி அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழிஒரீஇ உயர்த்து பாய் புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்கள்." என்பது அவரது மதுரைக்காஞ்சிப் பகுதியாகும். இங்கனம் பழங் தமிழ் நால்கள் அமைச்சர்க்கு இலக்கணம் வகுத்துரைப்பது போன்று எந்த நாட்டு அரசியல் நூலும் எம்மொழி அரசியல் நூலும் செம்மையுற எடுத்துச் செப்பவில்லை என்பது திட்ப மாகும். தெய்வப் புலவராகிய திருவள்ளுவரோ அரச மரபில் பிறந்ததோடன்றி அரசற்கு உட்படு கருமத் தலைவராகப் பணியாற்றிய பரம்பரையினர். மேலும் அரசியல் அற நூல்களே முற்றக் கற்றுணர்ந்த மூதறி வாளர் அவர். ஆதலின் அவர்தம் நூலுள் வகுத் துள்ள அமைச்சியல் மிகவும் திட்ப நுட்பம் வாய்ந்த தாகும். - -