பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. களவும் காமமும் ஐம்பெருங் குற்றங்களுள் ஒன்முகக் கொள்ளப் படுவது களவு. பிறருக்குரிய பொருளை அவர் அறியாமல் வஞ்சித்துக் கவர்ந்துகொள்ளும் செயலே களவெனப்படும். பிறர் பொருளைக் கொள்ளக் கருதும் தீய உள்ளத்தை வெஃகாமை என்னும் அதிகாரத்தால் வள்ளுவர் வன்மையாகக் கண்டித்தார். களவாடும் கொடுஞ்செயலைக் கள்ளாமை என்னும் அதிகாரத்தால் கண்டிக்கின்றர். - பிறர்க்கு உரிய பொருளை ஒருவன் தான் பெற வேண்டும் என்று எண்ணுவதே நடுவுநிலையில்லாத செயலாகும். அங்கனம் பெறவிரும்பும் பிறர் பொருள் அறத்தின் வாயிலாக ஈட்டிய அரும்பொருளாக இருப்பின் அதனேக் கவர விரும்பியவன் குடியுடன் அடியோடு அழிவான். பிறர் கைப்பொருளைக் கவரும் கருத்து, ஒருவன் உளத்துத் தோன்றுமாயின் அன்றே அவன் செல்வம் அவனேவிட்டு அகலத் தொடங்கிவிடும். ஆதலின் அறிவுடையார் தாம் வறியவராயினும் அவ் வறுமையைப் போக்குதற்கும் பிறர் பொருளைக் கவர விரும்பார். விரும்புதலாகிய தீய எண்ணம், ஒருவனுக்கு இறுதியையே விளக்கும் என்று விளக்கியருளினர் திருவள்ளுவர். பிறர் பொருளே அடைய விரும்பும் கொடுமையை இல்லறவியலில் விளக்கிய , வள்ளுவர் களவால் விளையும் தீமையைத் துறவறவியலில் குறிப்பிடுகிறர். இதற்குரிய காரணம் யாதாகலாம்? இல்வாழ்வார் தம்மைச் சார்ந்தாரிடம் வஞ்சித்துக் கவர்தற்குரிய