பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவும் காமமும் 25 மனத்தைத் தன்வழிப்படுத்தும் வலிமையில்லாத ஒருவன் வலியுடைய தவத்தவர் கோலத்தைத் தாங் கின்ை. தவக்கோலத்தின் பெருமையால் அவனைப் பெரியோன் என்று நம்பினர் பிறர். அவன் அக் கோலத்துடன் மறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விரும்பிச் சென்ருன். அவன் இல்லறத்தில் தனக்கு உரியவளாய் இருந்த இல்லாளேயும் விட்டகன்முன். அத்தகையானது இழிசெயல் புலித்தோல் போர்த்த பசுவின் செயலுக்கு ஒப்பாயிற்று என்று உரைத்தார் ஒப்பில் புலவர். - வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்த் தற்று.” என்பது அவர் சொல்லமுதமாகும். இங்ஙனம் தவக்கோலத்தால் ஒருவன் கன்னே மறைத்துக்கொண்டு தவமல்லாத அவச் செயலைச் செய்வானுயின் அது புதருள் மறைந்து புட்களைப் பிணிக்கும் புளிஞர் செயலுக்கு ஒப்பாகும். பிறர் நன்கு மதித்தற் பொருட்டுப் பெருமையான கோலத் துடன் முற்றுங் துறந்தோம் என்று மொழிவாரது மறைந்த ஒழுக்கம் அப்பொழுதைக்கு இன்பம் போலத் தோன்றலாம். ஆனல் பின்னர் அவர்களே, நாம் என்ன செய்தோம்! என்ன செய்தோம்! என்று எண்ணியெண்ணி இரங்குமாறு எண்ணற்ற துன்பங்களை உண்டு பண்ணும். உள்ளத்தில் உண்மையான துறவு கொள்ளாது, கள்ளத் துறவு பூண்டு கவினுறு தவக்கோலத்தால் இல்லறத்தாரை வஞ்சித்தொழுகும் புல்லர்களைப் போன்ற கொடியோர் இப் புவியில் பிறரில்லை.