பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவும் காமமும் 27 கண்ட புலவர் பெருமான், ஒருவனைத் துளயோன் என்றும் தீயோன் என்றும் பகுத்துணரக் கருவி யாவது உருவமன்று, அவரது செயலே என்று அறிவுறுத்தினர். அம்பு வடிவால் செவ்விதாயினும் செயலாற் கொடிதன்ருே யாழ் கோட்டால் வளைங்க தாயினும் இசை நல்கும் செயலால் செவ்விதன்முே 1 அவைகளைப் போன்றே ஒருவனது செயலைக்கொண்டு அவனது பெருமை சிறுமைகளைத் தெரிதல்வேண்டும் என்று தெரிவித்தருளினர் அத்தெய்வப் புலவர். பெருமைக்கும் சிறுமைக்கும் ஒருவரது கருமமே கட்டளைக்கல் என்று பின்னும் கட்டுரைப்பார் அப் புலவர். ஆதலின் தவம் செய்வார்க்குத் தனிப்பட்ட கோலம் வேண்டுவதன்று. அவர்கள் தலைமயிரை மழுங்கச் சிரைத்துக் கொள்ளவோ, நீண்ட சடையாக வளர்த்துக்கொள்ளவோ வேண்டுவதில்லை. உயர்க் கோர் தவநெறிக்குத் தகாதென விலக்கிய தீயொழுக் கத்தை அகற்றிவிட்டாலே போதுமானதாகும். 4. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்." - என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும்.